தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அபாய பகுதியாக அறிவிப்பு.. அரசு உத்தரவை மீறினால் ஆறு மாதங்கள் வரை சிறை வாசம் மற்றும் அபராதம்..

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அபாய பகுதியாக அறிவிப்பு.. அரசு உத்தரவை மீறினால் ஆறு மாதங்கள் வரை சிறை வாசம் மற்றும் அபராதம்..

Update: 2020-04-02 13:12 GMT

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே நாடு முழுவது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதையும் மீறி மக்கள் வெளியே சென்று வருகின்றனர்.

சென்னையில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்திலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன, போலீசார் வாகனங்களில் ரோந்து சுற்றி வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்பவர்கள் மட்டுமே வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் தமிழகம் முழுவதும் மக்கள் நடமாட்டம் சாலைகளில் குறைந்து வருகிறது. வரும் நாட்களில் போலீஸ் நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் அரசு , கொரோனா வைரஸ் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 பிரிவு 62-ன் கீழ் தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளை நோய் சட்டம் 1897-ன் படி வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பூங்காக்கள், வழிபாட்டு தலங்கள், அலுவலகங்கள் போன்ற இடங்களில் வருகை புரிபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தண்ணீர் குழாய்கள் மற்றும் கைகழுவும் சோப்புகள் வைக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து நோய்தொற்று ஏற்படாத வகையில் பராமரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது., இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மறுப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது. மீறினால் ஆறு மாதங்கள் வரை சிறை வாசம் அனுபவிக்க நேரிடும் அல்லது அபராதம், சிறை இரண்டும் விதிக்கப்படும். என்று தெரிவிக்கபட்டுள்ளது.

 

Similar News