விஜயின் தந்தை S.A சந்திரசேகர் மீது மோசடி புகார்!கருத்து சொல்வாரா விஜய் !

விஜயின் தந்தை S.A சந்திரசேகர் மீது மோசடி புகார்!கருத்து சொல்வாரா விஜய் !

Update: 2019-10-02 06:55 GMT

விஜயின் குடும்பத்திற்கு கருத்து சொல்வது என்றால் அல்வா சாப்பிடுகிற மாதிரி.அதுவும் விஜய்க்கு தற்போது அரசியல் ஆர்வம் மேலோங்கியுள்ளது. அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அரசியல் பேசி வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு டிராபிக் ராமசாமி படம் வெளிவந்தது. இதில் விஜயின் தந்தை டிராபிக் ராமசாமியாக நடித்திருப்பார்.


இந்த படத்திற்காக கனடா வாழ் தமிழரிடம் கனடா ரூ.21 லட்சம் பணத்தை பெற்றுள்ளார் கடனை திருப்பி கேட்ட கனடா வாழ் தமிழரை விஜயின் தந்தை சந்திரசேகர் மிரட்டியுள்ளார்.எங்களை கண்டால் தமிழக அரசாங்கமே மிரளும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இந்நிலையில் ரூ.21 லட்சம் பணத்தை சந்திரசேகரிடம் இருந்து பெற்று கொடுக்குமாறு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.


Similar News