ஜெயலலிதாவுக்குப் பிறகு முதன்முதலாக மாநிலம் கடந்து முத்திரை பதிக்கும் பெண்மணி Dr. தமிழிசை!! பாஜக தொண்டர்கள் புகழாரம்

ஜெயலலிதாவுக்குப் பிறகு முதன்முதலாக மாநிலம் கடந்து முத்திரை பதிக்கும் பெண்மணி Dr. தமிழிசை!! பாஜக தொண்டர்கள் புகழாரம்

Update: 2019-09-01 11:20 GMT

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள அவருக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டும், வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. அனைவரும் அவருடைய கடும் உழைப்பையும், மனோ தைரியத்தையும், அவருடைய சமூக, அரசியல் பணிகளையும் பாராட்டி வருகின்றனர்.



இந்த நிலையில் சமூக ஊடகங்களில் தமிழிசை மற்றும் பாஜகவுக்கு அரசியல் ரீதியாக எதிர்ப்பு தெரிவிக்கும், நையாண்டி செய்யும் தமிழக நெட்டிசன்கள் கூட டாக்டர் தமிழிசை கவர்னராக உயர்வு பெற்றிருப்பதற்கு மனமார தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர். குறிப்பாக வெற்றியோ, தோல்வியோ கவலைப் படாமல் நம்பிக்கையாக உழைத்தவர் அவர் எனவும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்துக்கு அப்பாலும் பிரபலமாகி அகில இந்திய அளவில் மக்கள் மனதில் இடம் பிடித்ததைப் போல தற்போது தமிழிசையும் சிறந்த இடத்தை தனது திறனாலும், உழைப்பாலும் பெற்று வருவதாக பாஜக தொண்டர்களும், நிர்வாகிகளும் மனமார பாராட்டி வருகின்றனர்.


Similar News