தேநீர் ரசிகர்களே! தேநீர் வரலாறு தெரியுமா உங்களுக்கு?
தேநீர் ரசிகர்களே! தேநீர் வரலாறு தெரியுமா உங்களுக்கு?
இந்தியாவில் நீருக்கு அடுத்தபடியாக அதிகம் பருகப்படும் பானம் தேநீர். இதனை ஒரு மிடரு
அருந்தினாலும் நம் மொத்த இயக்கமும் புத்தணர்வு பெறுகிறது. என்றேனும் இந்த தேநீர்
எப்படி, எப்போது இந்தியாவுக்கு அறிமுகமானது என நாம் சிந்தித்திருக்கிறோமா . இன்று
உலகரங்கில் இந்தியா தேநீர் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது.
அப்படியே கையில் ஒரு தேநீர் கோப்பையை ஏந்தியவாறே, ஒரு மிடறு உருஞ்சியபடியே
அதன் வரலாற்றை படித்து தான் பாருங்களேன். இந்தியாவில் 1823 ஆம் ஆண்டு ராபர்ட்
ப்ரூஸ் என்பவர் தேநீர் இலைகளை அசாமில் கண்டறிந்தார். இந்த இலைகளில் சிலவற்றை
அவர், அவருடைய சகோதரரான ராபர்ட் சி.ஏ.ப்ரூஸ் என்பவரிடம் கொடுத்தார், பின் அவர்
டேவிட் ஸ்காட் என்பவரிடம் ஆய்வுக்காக கொடுத்தார். அவர் அதை கொல்கத்தாவின்
விலங்கியல் பூங்காவில் ஆய்வு செய்தார். பின் இது தேநீர் இலைகள் தான் என்பதை உறுதியும்
செய்தார்.
அதனை தொடர்ந்து 1837 ஆம் ஆண்டு மேல் அசாமின், சபுவா என்ற இடத்தில் முதல் தேநீர்
தோட்டம் உருவானது. அதனை தொடர்ந்து 1839 ஆம் ஆண்டு அசாம் தேநீர் நிறுவனம்
தோற்றுவிக்கப்பட்டது. இதன் தலைமையகம் அசாமிலுள்ள நசீரா என்ற இட த்தில் உள்ளது.
இது தான் இந்தியாவின் பழமையான ஜனரஞ்ச நிறுவனம், ஆச்சர்யகரமாக இன்றளவும் அது
சிறப்பாக இயங்கிவருகிறது.
அசாமில் உள்ளதை போலவே தேநீர் தோட்டத்தை டார்ஜிலாங் மற்றும் நீலகிரியில் உருவாக்க
சீனாவில் இருந்து தேநீர் விதைகள் வரவழைக்கப்பட்டன. 1832 ஆம் ஆண்டு முதல்
நீலகிரியிலும், 1841 ஆம் ஆண்டு முதல் டார்ஜிலிங்கிலும் தேநீர் இலைகள்
விளைவிக்கப்படுகின்றன.
விளைந்த ஒரு தேநீர் இலையை, இன்று நடைமுறையிலுள்ள ஒரு தேநீர் இலையாக மாற்ற
எத்தனை வலிகளை கடக்க வேண்டியுள்ளது என்று என்றேனும் சிந்தித்ததுண்டா . தேநீர்
இலைகளை பயன்பாட்டிற்காக மாற்றும் இந்த செயல்முறையை உருவாக்கியவர் வில்லியம்
மெக் கெர்கர். க்ரஸ் ( கசக்குதல்), டியர் ( கிழிபடுதல்) மற்றும் கர்ல், திருப்புதல் என்பது அந்த
செயல்முறையின் சுருக்க வடிவம். முதலில் இதனை மனிதர்கள் கைகளால் செய்து வந்தனர்.
ஆனால் தற்சமயம் இது இயந்திரமயமாக்கப்பட்டு விட்டது.