பெரிய அளவிலான வன்முறைகளை தடுக்கவே தொலைபேசி இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை!

பெரிய அளவிலான வன்முறைகளை தடுக்கவே தொலைபேசி இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை!

Update: 2019-10-19 13:14 GMT

மத்திய அரசு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தையும், அம்மாநிலத்திற்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் ‘370’ மற்றும், ‘35ஏ’ சட்டப்பிரிவுகளை கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி நீக்கியது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து வதந்திகள் பரவ கூடாது என்றும், கலவரங்கள் உண்டாக கூடாதென்றும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நள்ளிரவே, தொலைத்தொடர்பு சேவையை அரசு துண்டித்தது. தற்போது 72 நாட்களுக்குப் பின்னர், அங்கு தொலைத்தொடர்பு சேவை மீண்டும் செயல்படத் தொடங்கி இருக்கிறது.


2016 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை ஜம்மு- காஷ்மீரில் 183 முறையும், ராஜஸ்தான் மாநிலத்தில் 43 முறையும் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டு இருக்கிறது. 2019-ஆம் ஆண்டு 67 முறை ஜம்மு - காஷ்மீரில் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டு இருக்கிறது. பொதுப் பாதுகாப்பு மற்றும்முன்னெச்சரிக்கை நட வடிக்கைக்காகவே அதிகமுறை தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.


இதில், தேசியப் பாதுகாப்புக்காக 26 முறை துண்டிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு - காஷ்மீரில் புர்ஹான்வானி கொல்லப்பட்டபோது அதிகபட்சமாக 2016 ஜூலை முதல் ஜனவரி 2017 வரை தொலைத் தொடர்புசேவைகள் 6 மாத காலம் துண்டிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது. ஆனால் அரசு வேண்டுமன்றே தொலைப்பேசி சேவையை துண்டிப்பது போல சித்தரித்து பிரிவினைவாதிகள் வதந்தி பரப்பி வருகின்றனர்.


Similar News