ஆடாத ஆட்டமா ஆடி இருக்காங்க - ஸ்பெயின் நாட்டில் டென்னிஸ் அணி வாங்குவது வரை சென்ற ஊழல் பணம் : திடுக்கிடும் தகவல்கள்!

ஆடாத ஆட்டமா ஆடி இருக்காங்க - ஸ்பெயின் நாட்டில் டென்னிஸ் அணி வாங்குவது வரை சென்ற ஊழல் பணம் : திடுக்கிடும் தகவல்கள்!

Update: 2019-08-21 08:08 GMT

மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, 2007ல் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். அப்போது, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனமானது, வெளி நாடுகளில் இருந்து, 305 கோடி ரூபாய் முதலீடு பெற்றது .இதற்காக, நிதித் துறையின் கீழ் செயல்படும் அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம், சட்ட விரோதமாக அனுமதி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்த அனுமதி அளிக்கப்பட்டதில் சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரத்தின் தலையீடு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.


இதையடுத்து, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா இயக்குனர்கள் மற்றும் இந்திராணி முகர்ஜி உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.இந்த வழக்கில் கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக, முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட டெல்லி உயர் நீதிமன்றம், தனது 24 பக்க தீர்ப்பில்,பெரிய அளவிலான இந்த பொருளாதார குற்றம், நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டதாக முதல் பார்வையிலேயே தெரிவதாக குறிப்பிட்டுள்ளது.


சிதம்பரத்தை விசாரணையில் எடுத்து, அவரிடம் 54 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட சொத்துக்கள் குறித்த விவரம் அமலாக்க துறையினரால் கேட்கப்பட உள்ளது. மேலும் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் ஸ்பெயின் நாட்டில் டென்னிஸ் அணியை விலைக்கு வாங்கியது தொடர்பாகவும், இங்கிலாந்து நாட்டில் சொத்துக்கள் வாங்கி குவித்தது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட உள்ளது. INX மீடியா ஊழலில் முறைகேடாக வந்த பணத்தின் மூலம் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அமலாக்கத்துறை 2018 ஆம் ஆண்டு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


பிரிட்டனில் சொமேர்செட் என்ற ஊரில் சரிட்ஜ் ஃபார்ம் என்ற பண்ணை வீடு 88 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. இதை வாங்க கார்த்தியின் அட்வாண்ட்டேஜ் ஸ்ட்ராட்டஜிக் பிரைவேட் லிமிட்டட் என்ற சிங்கப்பூர் நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து பணம் வழங்கப்பட்டுள்ளது. சொத்துப் பதிவேட்டில் இதன் மதிப்பு ஒரு மில்லியன் பவுண்டு என்று குறிக்கப்பட்டுள்ளது.


மனில்லா மாவேரிக்ஸ் என்ற டென்னிஸ் விளையாட்டு குழுவை வாங்குவதற்காக கார்த்தியின் சிங்கப்பூர் நிறுவனம் கிராவிட்டாஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டது. இந்த டென்னிஸ் குழுவின் மொத்த மதிப்பு பன்னிரெண்டு மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இத் தொகையை பத்துத் தவணைகளில் கார்த்தி செலுத்தினார்.


இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நுங்கம்பாக்கம் கிளையில் கார்த்திக் சிதம்பரம் 9.23 டெபாசிட் செய்துள்ளார். DCB வங்கியில் அவரது நிறுவனமான அட்வாண்ட்டேஜ் ஸ்ட்ராட்டஜிக் பிரைவேட் லிமிட்டட் பெயரில் 90 இலட்சம் வைத்துள்ளார்.


பீட்டர் முகர்ஜியின் 3.09 கோடி மதிப்பிலான பணம் ட்வாண்ட்டேஜ் ஸ்ட்ராட்டஜிக் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டு, அது கார்த்திக் சிதம்பரத்தின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. இவ்வகையில் பெறப்பட்ட பணம் வாசன் கண் மருத்துவமனை பங்குகளை வாங்க செலவிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 41 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.


Similar News