தல 60 படத்தின் அப்டேட்!!

தல 60 படத்தின் அப்டேட்!!

Update: 2019-10-03 08:09 GMT

இந்த 2019ஆம் ஆண்டு நடிகர் தல அஜித்தின் ஆண்டு என்றே கூறலாம் . இந்த வருடத்தில் விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் ஆனது.
ஹெச்.வினோத் இயக்கவுள்ள அடுத்த படத்திலும் அஜித் நடிக்கிறார். நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர்தான் இப்படத்தையும் தயாரிக்கிறார்.


ஏற்கனவே இந்த படத்தை பற்றி பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்படுவதாகவும், அஜித் இதில் ரேஸர் எனவும் பல செய்திகள் வந்து பட்டைய கிளப்பிக்கிறது . சிலர் யாருக்கும் தெரியாமல் படத்திற்கு பூஜைபோட்டு படத்தின் ஷூட்டிங் தொடங்கியது எனவும் பேசி கொண்டுஇருக்கின்றனர்.


ஆனால் இப்படத்தின் பூஜை டிசம்பர் மாதம் 20ஆம் தேதி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
பூஜை முடிந்தவுடன் ஷூட்டிங்கை வெளிநாட்டில் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Similar News