பயணிகள், அலுவலர்கள் வசதிக்காக ‘ தண்டோரா ‘ செயலி ! தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு

பயணிகள், அலுவலர்கள் வசதிக்காக ‘ தண்டோரா ‘ செயலி ! தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு

Update: 2019-10-23 03:41 GMT

அரசு மற்றும் கிராம பஞ்சாயத்துக்கள் தங்கள் முக்கிய அறிவிப்புகளை அறிவிக்க கிராம மக்கள் கூடுமிடங்களில் அல்லது தெரு முனைகளில் கிராம உதவியாளர்கள் மூலம் மேளம் அடித்து உரக்க கூறுவர். காலம் காலமாக நடைபெற்று வரும் இந்த முறைக்கு இந்த முறைக்கு தண்டோரா என்று பெயர்.


இந்த நிலையில் தெற்கு ரயில்வே பிரிவு ரயில்வே பயண கட்டணம், சரக்கு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்த அறிவிப்புகளை அவ்வப்போது தெரிந்து கொள்ள தண்டோரா என்ற பெயரில் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.  


சென்னை தெற்கு ரயில்வே தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  à®¤à®©à¯à®Ÿà¯‹à®°à®¾ செயலியை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் வெளியிட்டார்.


இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் ரயில்வே சுற்றறிக்கைகள், தெற்கு ரயில்வே சுற்றறிக்கைகள், பணி குறித்த ஆலோசனைகள், புதிய திட்டங்கள், பயணக் கட்டணம், சரக்கு கட்டணம், புகார்களுக்கான தீர்வுகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது.  


Similar News