போஸ்டருக்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை.! சீமானுக்கும் காங்கிரசுக்கும் போஸ்டர் யுத்தம்.!

போஸ்டருக்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை.! சீமானுக்கும் காங்கிரசுக்கும் போஸ்டர் யுத்தம்.!

Update: 2019-10-21 07:03 GMT

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க தி.மு.க நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இடைத்தேர்தல் முடிவுகல் வரும் 24 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. தீவிர பிரச்சாரத்தில் முதலவர் துணை முதல்வர் திமுக தலைவர் பாமக தலைவர்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்றனர். பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி பேசினார்கள்.


இதற்கு ஒருபடி மேலே சீமான் பேசினார் அவர் பொது கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொன்றது நாங்கள் தான் என ஆவேசமாக பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு காங்கிரஸ் அதிமுக பாஜக தேமுதிக என பல கட்சிகள் கண்டம் தெரிவித்தது. திமுக மௌனம் சாதித்தது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சீமான் மீது புகார் அளித்துள்ளது.


இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தமிழகத்தின் பல காங்கிரஸ் கட்சியின் சார்பில் சீமானை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த போஸ்டர்களுக்கு பதிலடி தரும் வகையில் நாம் தமிழர் கட்சியினர் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஈழத்தமிழர்கள்களை கொல்வதற்கு காரணமான காங்கிரசை பற்றி சீமான் பேசியது சரியே என போஸ்டர் ஒட்டியுள்ளனர். இது அந்த பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து காவல்துறை போஸ்டர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் பிரதமர் கொலையுண்டதை நியாயப்படுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து பேசி வருவது இந்திய இறையாண்மைக்கு எதிராக உள்ளது.





Similar News