முதல்வர் சிறப்பு குறைதீர்பு முகாமில், மேடை ஏறி தி.மு.க எம்.எல்.ஏ ரகளை – கைகலப்பு.!

முதல்வர் சிறப்பு குறைதீர்பு முகாமில், மேடை ஏறி தி.மு.க எம்.எல்.ஏ ரகளை – கைகலப்பு.!

Update: 2019-11-15 12:33 GMT

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் முதல்வர் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடந்தது. இதில் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை ஏற்று, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.


அப்போது அணைக்கட்டு தொகுதி திமுக எம்எல்ஏ நந்தகுமார் தனது ஆததரவாளர்களுடன், திடீரென மேடையேறினார். அவர், அமைச்சர் வீரமணியை பார்த்து குற்றம் சாட்டி ஆவேசமாக பேசினார். தொடர்ந்து அவர் ரகளையில் ஈடுபட்டார். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மேடையில் கைகலப்பு ஏற்பட்டது.


பின்னர் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, நந்தகுமாரையும், அவரது ஆதரவாளர்களையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.


இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் முதல்வர் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் தொடர்ந்து நடந்தது.


இந்த சம்பவம் குறித்து அமைச்சர் வீரமணி கூறும்போது, “திட்டமிட்டு ரகளை செய்ய வேண்டும் என்பதற்காகவே நந்தகுமார் மேடை ஏறி உள்ளார். அவர் உள் நோக்கத்துடன் இங்கு வந்துள்ளார். அணைக்கட்டு தொகுதியை சேர்ந்த 1050 பேருக்கு இதுவரை உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் அபாண்டமாக பொய் சொல்கிறார்” என்றார்.


Similar News