இந்து கடவுள் பெயர் இருந்ததால், இசையமைக்க மறுத்த இசையமைப்பாளர்!!
இந்து கடவுள் பெயர் இருந்ததால், இசையமைக்க மறுத்த இசையமைப்பாளர்!!
கலை என்று வரும்போது எந்த ஒரு சினிமா ரசிகரும் அவர் இந்து, அவர் கிறிஸ்துவர், அவர் முஸ்லிம் எனப் பார்த்து அவர்களது பாடல்களை ரசிப்பதில்லை. அவர்களுடைய இசையைத்தான் சினிமா ரசிகர்கள் பெரிதும் விரும்பி ரசிக்கிறார்கள்.
தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகத்தில் சமீப காலங்களில் இந்து அல்லாத இசையமைப்பாளர்கள் பிரபலமாக இருக்கிறார்கள்.
அவர்களில் சில இந்து அல்லாத இசையமைப்பாளர்கள், இந்து கடவுள்களின் பெயர் வந்தால் இசையமைக்க மறுப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளிவந்தன.
தமிழில் முன்னணியில் இருக்கும் இசையமைப்பாளர் ஒருவர்கூட சில வருடங்களக்கு முன்பு ஒரு திரைப்படத்தில் இடம் பெற்ற ஐயப்பன் பற்றிய பக்திப் பாடலுக்கு இசையமைக்க மறுத்தார். பின்னர் வேறு ஒரு இசையைமப்பாளரை வைத்து அந்தப் பாடலைப் பதிவு செய்தார் அந்த பிரபலமான இயக்குனர்.
இப்போது அது போன்றதொரு விவகாரம் தெலுங்குத் திரையுலகத்தில் சர்ச்சையில் எழுந்துள்ளது. பிரபல பாடலாசிரியரான ஆனந்த் ஸ்ரீராம் சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்த மதவெறி இசையமைப்பாளர் குறித்து வருத்தத்துடன் பேசினார். அவர், “நான் எழுதிய ஒரு பாடலில் இந்து கடவுள் பெயர் ஒன்று வந்தது. அந்தப் பெயர் வந்ததால் அந்தப் பாடலுக்கு இசையமைக்க அந்த இசையமைப்பாளர் மறுத்துவிட்டார்,” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த இசையமைப்பாளர் யார் என்பதற்கு அவர் பதிலளிப்பதை தவிர்த்துவிட்டார். அப்படி வெளிப்படுத்தினால், அந்த இசையமைப்பாளரின் இமேஜும் பெயரும் கெட்டுவிடும் என்று சொல்லியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து ரசிகர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த சிலரது பெயர்களைச் சொல்லி, அவரா, இவரா எனக் கேட்டு வருகிறார்கள்.