சோசியல் மீடியாவில் வருவதை அப்படியே பதிவிடும் தமிழ் ஊடகங்கள் - கேந்திரிய வித்யாலயா பள்ளி கேள்வி சர்ச்சைக்கு உண்மை தன்மை ஆராயப்பட்டதா.?

சோசியல் மீடியாவில் வருவதை அப்படியே பதிவிடும் தமிழ் ஊடகங்கள் - கேந்திரிய வித்யாலயா பள்ளி கேள்வி சர்ச்சைக்கு உண்மை தன்மை ஆராயப்பட்டதா.?

Update: 2019-09-06 14:59 GMT

கேந்திரிய வித்யாலாவின் பாடப்புத்தகத்தில் இருந்த குறிப்பிட்ட ஒரு பக்கம் அதிகமாக இணையத்தில் பகிரப்பட்டது. அது குறித்த விவரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.


6-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம் பெற்ற கற்றல் திறன் பக்கத்தில் தலித் என்றால் என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அடுத்து டாக்டர் அம்பேத்கர் எந்தச் சமூக வகுப்பைச் சேர்ந்தவர் என்னும் கேள்வியும், அதற்கடுத்து, இஸ்லாமியர்களின் பொதுப் பண்புகள் என்ன என்ற கேள்வியும் இடம்பெற்றிருந்தது. இவை கேந்திரிய வித்யாலயாவின் 6-வது வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ள கேள்விகள் எனவும் தகவல் பரவியது. உடனே இந்திய அரசியலமைப்பு சட்டம் விதி 17 தீண்டாமை ஒழிப்பு பற்றி கூறும் நிலையில், பள்ளியிலேயே தீண்டாமை வளர்க்கலாமா என்று ஒரு தரப்பு தாம் தூம் என்று பதிவிட ஆரம்பித்துவிட்டனர்.





கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு என்று தனியாகப் பாடப் புத்தகங்கள் எதுவும் கிடையாது. அங்கு பயன்படுத்தப்படுபவை NCERT பாட நூல்கள்தான். குறிப்பிட்ட அந்தப் பக்கம் 6 ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. ஆனால், இது கேந்திரிய வித்யாலயாவில் மட்டும் பயன்படுத்தும் புத்தகம் கிடையாது. அகில இந்திய அளவில் பல்வேறு பள்ளிகளில் இந்தப் பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. இதனை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மட்டுமே பயன்படுத்துவதாக கூறி தமிழக ஊடகங்கள் திரித்து செய்தி வெளியிட்டு வருகின்றன.


தமிழக பள்ளி பாடபுத்தகங்களிலேயே 'தீண்டாமை ஒரு பெரும்குற்றம்' என்ற வாசகம் இடம்பெறுகிறது. அதற்காக பிஞ்சு மனதில் தீண்டாமை வார்த்தையை பதிய வைக்கலாமா என்று வாதிட கூடாது. அது தீண்டாமையை ஒழிக்க சொல்லப்படும் வாசகம். அது போல  6 ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம் பெற்ற கேள்விகளுக்கு பின்னால் உள்ள பாடத்தின் தன்மை பற்றி ஆராய்ந்து தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்க வேண்டும். ஆனால் யாரும் அப்படி செய்யவில்லை. ஒரு கேள்வி அதற்கு, அளிக்கப்பட்ட நான்கு சாய்ஸ் மட்டும் வைத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் கம்பு சுற்றி வருகின்றனர்.


அந்த கேள்வி இடம்பெறும் பாடத்தில் தீண்டாமை குறித்து விளக்கப்பட்டிருக்கும். அதனை பற்றிய புரிதல் குழந்தைகளுக்கு ஏற்படும் அளவுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கும். அதற்கு உதாரணமாக அம்பேத்கார் வாழ்க்கை குறிப்பு இடம்பெற்று இருக்கும். அதிலிருந்து மாணவர்களின் கற்றல் திறன் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டிருக்கலாம். ஆனால் ஒரு கேள்வி கேட்கப்பட்ட பக்கத்தை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வருவது சரியாக அமையாது. கண்ணால் காண்பதை விட தீர விசாரிப்பதே மெய்யாகும்.


Similar News