மதம் மாறிய திருமலை ஊழியர்கள் வேலைக்காக இந்துவாக நடிப்பு! மதம் தேவை இல்லை ஆனால் மதம் தரும் பணம் தேவை!

மதம் மாறிய திருமலை ஊழியர்கள் வேலைக்காக இந்துவாக நடிப்பு! மதம் தேவை இல்லை ஆனால் மதம் தரும் பணம் தேவை!

Update: 2019-09-01 02:02 GMT

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடைநிலை ஊழியர்கள் முதற்கொண்டு, தேவஸ்தான உயர் அதிகாரிகள் வரையிலும் காவல் அதிகாரிகள், கண்காணிப்பு அதிகாரிகள் என அனைத்து துறைகளிலும் இந்துக்கள் மட்டுமே அதிகாரிகளாக ஊழியர்களாக நியமனம் செய்யப்படுவார்கள். ஏனெனில் குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஆளுநர், மாநில முதல்வர்கள், சினிமா பிரபலங்கள் என முக்கிய பிரமுகர்கள் வரும்போது அவர்களுடன் கோயிலுக்குள் பாதுகாப்புக்குச் செல்வதால், இவர்கள் இந்துக்களாகவே நியமனம் செய்யப்படுவது வழக்கம்.


இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் ஊழியர்களில் இந்துக்கள் அல்லாத வேறு மதத்தைச் சேர்ந்த ஊழியர்கள் ராஜினாமா செய்ய சமீபத்தில் ஆந்திர மாநில முதன்மை செயலாளர் வாய்மொழியாக உத்தரவிட்டார். வேற்று மத ஊழியர்கள் கிட்டத்தட்ட 46 பேர் பணியில் உள்ளார்கள் அவர்கள் எப்போது பதவி விலகுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.


சமீபத்தில் திருப்பதி - திருமலை இடையே இயக்கப்படும் ஆந்திர அரசுப் பேருந்து டிக்கெட்டின் பின்புறம் ஜெருசலேம் மற்றும் ஹஜ் யாத்திரை செல்வதற்கான விளம்பரம் அச்சிடப் பட்டிருந்தது. இது மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருமலையில் வேற்று மதப் பிரச்சாரம் உட்பட தர்ணாக்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவையும் தடை செய்யப்பட்டுள்ளன.


இதையும் படிங்க : திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை! கிறிஸ்தவ மத வெறியை மூடி மறைக்க ஜெகன் மோகன் ரெட்டி நடவடிக்கை!!


ஆனால், அங்கு பணிபுரியும் 46 ஊழியர்கள் பணியில் சேர்ந்த பின்னர், வேற்று மதத்துக்கு மாறி உள்ளார்கள் அவர்களின் நடவடிக்கைகள் சற்று மாறுபட்டுள்ளது. இவர்கள் தற்போது தேவஸ்தானத்தின் பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றி வரு கின்றனர். சிலர் தேவஸ்தான அலு வலகத்தில் பணியாற்றுகின்றனர்.


இதை கண்ட சக ஊழியர்கள் திருமலை தேவஸ்தானத்தில் முறையிட்டுள்ளனர். இது குறித்து ஆய்வு செய்யும் போது அவர்கள் மதம் மாறியது தெரியவந்துள்ளது. இதனிடையே அவர்களை தாய் மதம் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் தாய் மதம் திரும்ப மறுத்துவிட்டனர்.


இந்த பிரச்சினையை எப்படி கையாள் வது என தேவஸ்தான உயர் அதிகாரி கள் குழம்பி போயிருந்த சமயத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏழுமலை யானை தரிசிக்க திருமலைக்கு வந்தார் மாநில முதன்மை செய லாளர் எல்.வி.சுப்ர மணியம். பின்னர் அவர் வேற்று மத ஊழியர்கள் குறித்த விவரங்களை தேவஸ் தான அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.


பின்னர் அவர் கூறும்போது, ‘‘மதம் மாறுவதை நாங்கள் குறை கூறவில்லை. ஆனால், இந்துக்களின் மிகப்பெரிய திருத்தலமான திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாற்று மதத்தினர் பணியாற்றுவதை இந்துக்கள் விரும்ப மாட்டார்கள். அவர்களது மனம் புண்படும்படி நாம் நடந்து கொள்ளக் கூடாது. எந்த மதத்தையும் நாங்கள் குறை கூறவில்லை. இங்கு பணியாற்றும் வேற்று மதத்தைச் சேர்ந்த ஊழியர்கள் தயவு செய்து தங்களது பணியை ராஜினாமா செய்து விடுங்கள். ‘நாங்கள் இந்துதான்’ என நீங்கள் எங்களை நம்பவைக்க முயற்சி செய்தால், நாங்கள் அடிக்கடி உங்களது வீடுகளில் சோதனையிட வேண்டி இருக்கும். உங்களை இரவு பகலாக கண்காணிக்க வேண்டி வரும்’’ எனக் கூறினார்.


இதையும் படிங்க : அரசு கட்டிடங்களுக்கு கட்சி கலரில் பெயிண்டிங்! ஜெகன் மோகனின் அடுத்த அடாவடி!!


Similar News