“உப்பை தின்னவன் தண்ணீர் குடிப்பான், ஊழல் செய்தவன் தண்டனை அனுபவிப்பான்” - தலைமறைவான ப.சிதம்பரம் குறித்து பிரேமலதா கருத்து!!

“உப்பை தின்னவன் தண்ணீர் குடிப்பான், ஊழல் செய்தவன் தண்டனை அனுபவிப்பான்” - தலைமறைவான ப.சிதம்பரம் குறித்து பிரேமலதா கருத்து!!

Update: 2019-08-21 10:08 GMT


ஐ.என்.எஸ். மீடியா வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவர் தலைமறைவாக இருந்து வருகிறார். அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவரது செல்போன் சுவிச்ஆப் செய்யப்பட்டுள்ளது.


ஒரு முன்னாள் மத்திய உள்துறை அமைச்சராகவும், மத்திய நிதி அமைச்சராகவும் இருந்த ப.சிதம்பரம் தலைறைவானது மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது.


நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கு தொடர்பாக தெ.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறும்போது, “உப்பை தின்னவன் தண்ணீர் குடிப்பான். ஊழல் செய்தவன் தண்டனை அனுபவிப்பான்’’ என்று சொல்வார்கள். அந்த கருத்தை நானும் தெரிவிக்கிறேன்” என்றார்.


Similar News