பாபர் கட்டியது மசூதியே அல்ல; அந்த இடம் பாபருக்கு சொந்தமானதும் அல்ல! உச்சநீதிமன்றறத்தில் வக்கீல் அதிரடி!!
பாபர் கட்டியது மசூதியே அல்ல; அந்த இடம் பாபருக்கு சொந்தமானதும் அல்ல! உச்சநீதிமன்றறத்தில் வக்கீல் அதிரடி!!
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
வழக்கு விசாரணையின் 15-வது நாளான நேற்று, அகில பாரதிய ஸ்ரீ ராம் ஜன்மபூரி புனருதார சமிதி என்ற, ஹிந்து அமைப்பின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.என்.மிஸ்ரா வாதிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
இஸ்லாமிய சட்டத்தின்படி, ஒரு மசூதி என்பதற்கு சில விதிமுறைகள், அம்சங்கள் உள்ளன. அயோத்தியில் முகலாய மன்னர் பாபரால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் கட்டடம் மசூதியே அல்ல. அந்த இடம் பாபருக்கு சொந்தமானதும் அல்ல.
முஸ்லிம்களின் சொத்துக்களை, 'வக்ப்' என்ற அமைப்பு நிர்வகிக்கும். ஆனால் இந்தக் கட்டடம், எந்த வக்ப் அமைப்பின் கீழும் இருந்ததில்லை. மேலும், இடிக்கப்பட்ட கட்டடம், மசூதியின் வடிவிலும் இல்லை.
இஸ்லாமிய சட்டங்கள் இதற்கு ஆதாரமாக உள்ளன. இஸ்லாமிய சட்டத்தின்படி, மற்றொரு மதத்தினருக்கு சொந்தமான நிலத்தில், மசூதியை கட்ட முடியாது. முகலாய அரசர் ஷாஜகான் வெளியிட்ட ஒரு அரசு ஆணையில், ஹிந்து கோவிலுக்கு சொந்தமான நிலத்தை திருப்பி தரும்படி கூறியுள்ளார்.
இந்த நிலம் ஹிந்துக்களுக்கே சொந்தமானது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.