ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய புரட்சியில் இறங்குவார்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய புரட்சியில் இறங்குவார்கள்!

Update: 2019-09-19 10:08 GMT

370 சட்டம் நீக்கத்திற்கு பிறகு காஷ்மீரில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காஷ்மீர் ஆப்பிள்கள் நேரடி கொள்முதல், வேலைவாய்ப்பு உருவாக்குதல், என பல்வேறு திட்டங்கள் காஷ்மீரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக காஷ்மீர் புதிய வளர்ச்சிப்பாதையில் நடைபோட்டு வருகிறது.


இந்நிலையில் காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் ஸ்ரீநகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியது சில நாட்களாகவே அமைச்சர்கள்மற்றும் மக்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி பேசி வருகின்றனர்.


இந்தியாவின் அடுத்த நடவடிக்கை ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது என்றால், அதற்கு ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தி அப்பகுதி மக்களின் நம்பிக்கையை பெற்றுவிட்டால் போதும், அடுத்த ஆண்டில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் களத்தில் இறங்குவார்கள், அங்கு ஓர் புரட்சி ஏற்படும்.மக்கள் தாங்களாகவே இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவிப்பார்கள்,இவ்வாறு தான் எனது திட்டம் அமையும்.


இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 22 ஆயிரம் காஷ்மீர் மாணவர்கள் படிக்கின்றனர்.அந்த மாணவர்களுக்கு உதவிகள், செய்திட அனைத்து மாநிலங்களிலும் அரசின் சார்பில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது.


என காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் பேசினார், அனைவரும் தங்களது அன்பை அனைத்து மக்களிடமும் செலுத்த வேண்டும் எனவும் கூறினார்.


Similar News