2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்துவார்கள் - ரஜினிகாந்த்!
2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்துவார்கள் - ரஜினிகாந்த்!
கோவாவில் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள இரண்டு நாள் முன்பு கோவாவுக்கு சென்றார் ரஜினி 9 நாட்கள் நடக்கும் விழாவில் கலை நிகழ்ச்சிகள் என பிரம்மாண்டமாக 200 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட உள்ளது இந்த விழாவில் கோல்டன் ஐகான் என்ற வாழ்நாள் சாதனையாளர் விருது ரஜினிக்கு வழங்கப்பட்டது இந்த விருதினை என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
சென்னை திரும்பிய ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ,அப்போது பேசிய அவர் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் 100% அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்துவார்கள் எனக் கூறியவர் கமல் உடனான கூட்டணி தொடர்பாக தேர்தல் நேரத்தில்தான் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார் அவருடன் இணைந்தால் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது அரசியல் சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.