இனி இந்தியாவில் 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே! இரும்பு பெண்மணியாக உருவெடுக்கும் நிர்மலா சீதாராமன்!
இனி இந்தியாவில் 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே! இரும்பு பெண்மணியாக உருவெடுக்கும் நிர்மலா சீதாராமன்!
நாட்டில் மொத்தம் உள்ள 22 பொதுத்துறை வங்கிகளை, ஒன்றுடன் ஒன்று இணைப்பதன் மூலம் பொது துறை வங்கிகள் 12 ஆக குறைக்க உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதன் மூலம், வங்கித்துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
இது குறித்து நிர்மலா சீதாரமன் கூறுகையில்:
பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியன்டல் வங்கி, யுனைடட் வங்கி இணைக்கப்படும்.இதன் மூலம் நாட்டில் 2வது பொதுத்துறை வங்கியாக செயல்படும்.
கனரா வங்கி, சிண்டிகேட் வங்கி இணைக்கப்படும்
யூனியன் வங்கி , ஆந்திரா வங்கி, கார்பரேசன் வங்கி இணைக்கப்படும்
இந்தியன் - அலகாபாத் வங்கிகள் இணைக்கப்படும்
10 பொதுத்துறை வங்கிகள் 4 பெரிய வங்கிகளாக இணைந்து செயல்படும்
7 வங்கிகளில் தான் 82 சதவீத வர்த்தக பணிகள் நடந்து வருகின்றன.
வங்கிகள் இணைப்பால் ஊழியர்களின் சம்பளம் ஒருபோதும் குறைக்கப்படாது, பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள். வங்கி முடிவுகளை கண்காணித்து நெறிப்படுத்த வெளியில் இருந்து அதிகாரிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வங்கிகளின் சேவை சிறப்படைய நடவடிக்கை எடுக்கப்படும்.வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம் அளிப்பதுடன் சேவை விரிவடைய நடவடிக்கை எடுக்கப்படும்.
வங்கி நிர்வாக குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும்
நிபுணத்துவம் வாய்ந்தவர்களை வங்கியின் உயர் பதவியில் நியமிக்க நடவடிக்கை
தொழில்நுட்பத்துடன் வங்கிகள் செயல்படும் வகையில் கவனம் செலுத்தப்படுகிறது.
இவ்வாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
இதனிடையே ஒரு காலத்தில் இந்தியாவில் தனியார் வங்கிகளே அதிகம் இருந்தன. தடுக்கி விழுந்தால் ஏதாவது ஒரு தனியார் வங்கியில்தான் போய் நிற்க வேண்டும். அந்த அளவுக்கு நாடு முழுவதும் தனியார் வங்கிகளே அதிகம் இருந்தன. அவற்றை நாட்டுடமையாக்கினார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி .
இதனால் நாடு முழுவதும் பரந்து விரிந்து கிடந்த தனியார் வங்கிகளை நாட்டுடமையாக்கினார் இந்திரா காந்தி. நாட்டிலேயே மிகப் பெரிய வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி உருவெடுத்தது. தற்போது கிட்டத்தட்ட இன்னொரு இரும்பு பெண்மணியாக உருவெடுத்துள்ளார் நிர்மலா சீதாராமன். அன்று இந்திரா காந்தி தனியார் வங்கிகளை இணைத்து நாட்டுடமையாக்கினார். இன்று நாட்டுடமையாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளை இணைத்துள்ளார் நிர்மலா சீதாரமன்.