இவர்கள்தான் பாட்டாசு வெடிக்க கூடாது என கூச்சலிடுபவர்கள்! இவரின் கல்யாணத்தை பாருங்கள் புரிந்து கொள்வீர்.!

இவர்கள்தான் பாட்டாசு வெடிக்க கூடாது என கூச்சலிடுபவர்கள்! இவரின் கல்யாணத்தை பாருங்கள் புரிந்து கொள்வீர்.!

Update: 2019-10-18 11:15 GMT

எப்பொழுதுமே தீபாவளி சமயத்தில், சுற்றுசூழல் பாதுகாப்பு என்ற பெயரில் பட்டாசு வெடிக்கூடாது என்று கூறி பலர் உபதேசம் செய்வார்கள், ஆனால் பட்டாசு தொழிலாளிகள் பற்றி கவலை கொள்ளவே மாட்டார்கள். இவர்கள் ஊருக்கு ஒரு உபதேசம் செய்தாலும், அதை அவர்கள் கடைபிடிக்கவே மாட்டார்கள்.


இதை போன்ற ஒருவர்தான் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. கடந்த வருடம் தீபாவளி பண்டிகள் சமயத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு காணொளியை வெளியீடு செய்தார். அதில் அவர் பட்டாசு தவிர்க்கவேண்டும் என்றும், அவர் தான் ஒரு ஆஸ்துமா நோயாளி என்றும், பட்டாசால் பல ஆஸ்துமா நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் கூறினார்.


ஆனால் அதற்க்கு சில மாதங்களுக்கு முன்பாக வெளிவந்த ஒரு புகைப்படத்தில், பிரியங்கா சோப்ரா அவரது கணவர் மற்றும் தாயாருடன் அமர்ந்து சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார். ஆஸ்த்மா நோயாளிகள் சிகரெட் பிடிக்கமாட்டார்கள். ஆனால் அவர் தீபாவளி சமயத்தில் ஆஸ்த்மா நோய் உள்ளது என்று கூறி, மற்ற சமயத்தில் சிகரெட் பிடித்தது, அவரது போலித்தனத்தை காட்டியது. இதனால் சமூக ஊடகங்கள் முழுவதும் பெரிதாக கண்டிக்கப்பட்டார்.


சினிமா துறையில் இருப்பவர்கள், அவர்களது படத்தை காட்சி பிடிக்க அமைக்கும் ஏற்பாடுகளில் பல சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் இவர்கள் படப்பிடிப்பை நிறுத்துகிறார்களா என்ற கேள்வியும் பலரால் எழுப்பப்பட்டது.




https://www.youtube.com/watch?v=jeoDCQdLe_s


இந்த சம்பவம், தீபாவளி சமயத்தில் பலர் போலியாக பட்டாசிற்கு எதிராக பேசிக்கொண்டு வருவார்கள் என்றும், அதனால் இந்த சமயத்தில் மக்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்றும் இது உணர்த்துகிறது.


Similar News