பட்டப்பகலில் நடுரோட்டில் பத்திரிகையாளர் மீது கொடூர தாக்குதல்! திருமாவளவன் கட்சி நிர்வாகிகள் ரவுடித்தனம்! வைரல் ஆனது வீடியோ!
பட்டப்பகலில் நடுரோட்டில் பத்திரிகையாளர் மீது கொடூர தாக்குதல்! திருமாவளவன் கட்சி நிர்வாகிகள் ரவுடித்தனம்! வைரல் ஆனது வீடியோ!
வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டையில், “கலைஞர் பாதை”
என்ற பத்திரிகை நடத்தி வருபவர் குணசேகரன். அந்த பத்திரிகையின் ஆசிரியராகவும் இவர் இருந்து
செயல்பட்டு வருகிறார்.
சமீபத்தில் திருமாவளவன், இந்து தெய்வங்களை கேவலமாக
பேசினார். இது ஒட்டுமொத்த இந்துக்கள் மனதையும் புண்படுத்தியது. இதுதொடர்பாக தமிழகத்தின்
பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பல தரப்பில் இருந்தும் திருமாவளவனுக்கு
கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
திருமாவளவனின் இந்த கேகலமான செயலை பத்திரிகையாளர் குணசேகரனும்
விமர்சித்துள்ளார். ஒரு இந்து என்ற முறையில் அது அவரது உரிமையும்கூட.
இதனால் ஆத்திரம் அடைந்த வேலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள்
கட்சி செயலாளர் குண்டா (எ) சார்லஸ், காரை.தமிழ், மற்றும் கட்சி நிர்வாகிகள், முத்துகடை
பகுதியில் சென்ற பத்திரிகையாளர் குணசேகரனை அடித்து உதைத்தனத்தனர். மேலும் அவருக்கு
கொலை மிரட்டலும் விடுத்து உள்ளனர்.
பட்டப்பகலில், நடுரோட்டில் பத்திரிகையாளர் குணசேகரனை
திருமாவளவன் கட்சி நிர்வாகிகள், நாயை அடிப்பதுபோல் அடித்தது பொது மக்களிடையே பீதியை
ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
“கலைஞர் பாதை” என்ற பெயரில் பத்திரிகை நடத்தி வரும்
பத்திரிகையாளர் குணசேகரன் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். கருணாநிதியின் முரட்டு பக்தர்களில்
இவரும் ஒருவர். கருத்து சுதந்திரம் பற்றி பேசி வரும் திமுக தலைவர் ஸ்டாலின், தாக்கப்பட்ட
பத்திரிகையாளர் குணசேகரனுக்கு ஆறுதல் சொல்ல வருவாரா?
வேலூரில் பத்திரிகையாளர் குணசேகரன் தாக்கப்பட்ட சம்பவம், பத்திரிகையாளர்கள் மத்தியில் பேரதிர்ச்சியையும், பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதில் தலையிட்டு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து பத்திரிகையாளர்களின் ஒரு மித்த கருத்தாக உள்ளது.