“இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல, காஷ்மீர்” என்று கூறிய திருமாவளவன், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவாரா?
“இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல, காஷ்மீர்” என்று கூறிய திருமாவளவன், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவாரா?
காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட தனி அந்தஸ்து மூலம், அங்குள்ள சுமார் 11 லட்சம் பட்டியலின மக்கள், காஷ்மீரின் இரண்டாம் தர குடி மக்களாக ஆக்கப்பட்டனர். அவர்களுக்கு காஷ்மீர் அரசு வேலை வாய்ப்பில் இடமில்லை. அவர்களின் பிள்ளைகளுக்கு தொழில்நுட்ப கல்லூரிகளில் படிக்க அனுமதி கிடையாது. சட்ட கல்லூரிகளில் அவர்களின் பிள்ளைகள் படிக்க அனுமதி கிடையாது.
உள்ளாச்சி தேர்தல்களில் ஓட்டு உரிமை கிடையாது. சட்டசபை தேர்தல்களில் ஓட்டுரிமை கிடையாது. இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள பட்டியலின மக்களுக்கான எந்த சலுகையும் காஷ்மீரில் உள்ள பட்டியலின மக்களுக்கு கிடையாது.
காலம் காலமாக அவர்கள் மலம் அள்ளும் தொழில் மட்டுமே செய்து வந்துள்ளனர். வேறு வேலைகளில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
தங்களுக்கும் சம உரிமை கேட்டு 1957-ஆம் ஆண்டு அங்குள்ள பட்டியலின மக்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக காஷ்மீர், ஜம்மு பகுதிகள் குப்பை மேடாயின. ஆனாலும் அவர்களுக்கு எந்த உரிமையும் கடைசி வரை வழங்கப்படவில்லை.
அதற்குப் பதிலாக அண்டை மாநிலமான பஞ்சாப்பின் குர்தாஸ்பூர், அமிர்தசரஸ் ஆகிய இடங்களில் இருந்து துப்புரவு தொழிலாளர்களை கொண்டு வந்து குப்பைகளையும், மலத்தையும் அள்ளினர். இப்படித்தான் பட்டியலின மக்களின் உரிமை போராட்டம் நசுக்கப்பட்டது. அதன்பிறகு, பஞ்சாபில் இருந்து அழைத்து வரப்பட்ட பட்டியலின மக்களுக்கும், உரிமைகள் மறுக்கப்பட்டன.
இந்த அடக்குமுறை, ஒடுக்குமுறைகளையும் தாண்டி அங்குள்ள பட்டியலின மக்களில் பலர் முதுகலை வரை படித்துள்ளனர். ஆனால் அவர்களால் குப்பை அள்ளும் வேலை, மலம் அள்ளும் வேலையைத்தவிர வேறு எந்த அரசு வேலையிலும் சேர முடியவில்லை.
இதுதான் தனி அந்தஸ்தால், காஷ்மீரில் உள்ள பட்டியலின மக்களின் உண்மை நிலை. ஆமாம் காஷ்மீரின் அந்தபுரம் இவ்வளவு கேவலமானதாக நாறியது 307 சட்டப்பிரிவால்.
இந்தியா முழுவதும் பட்டியலின மக்களுக்கு என்னென்ன சலுகைகள், இட ஒதுக்கீடுகள் வழங்கப்படுகிறதோ அவை அனைத்தும் காஷ்மீரில் உள்ள பட்டியலின மக்களுக்கு தனி அந்தஸ்த்தின் காரணமாக இதுவரை மறுக்கப்பட்டு வந்துள்ளது. இதுதான் கொடுமையிலும் கொடுமை.