குவாட்டர் கேட்டு மிரட்டிய திருமாவளவன் கட்சி மாநில நிர்வாகி! “வெச்சி செஞ்ச” டாஸ்மாக் ஊழியர்! வைலானது ஆடியோ!!
குவாட்டர் கேட்டு மிரட்டிய திருமாவளவன் கட்சி மாநில நிர்வாகி! “வெச்சி செஞ்ச” டாஸ்மாக் ஊழியர்! வைலானது ஆடியோ!!
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு ஆடியோ பதிவு வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோ பதிவவில், ஒரு டாஸ்மாக் சூப்பர்வைசருக்கும், திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி ஒருவருக்கும் நடந்த உரையாடல் இடம் பெற்று உள்ளது.
கைபேசியில் பேசுகின்ற நபர், “எனது சகலை செத்துப் போய்விட்டார். நான் உங்களிடம் டொனேஷன் எதுவும் கேட்கவில்லை. ஒரு நாலு குவாட்டர் மட்டும் கொடுத்து விடுங்கள். நான் வெளியில் வண்டியில் நிற்கிறேன்” என்கிறார்.
“நீங்கள் யார்? என்னவென்றே எனக்கு தெரியாது. திடீரென்று நாலு குவாட்டர் கொங்க என்று கேட்டால், எப்படிங்க கொடுக்கிறது?” என்று கேட்கிறார் அந்த டாஸ்மாக் சூப்பர்வைசர்.
“நண்பா பாத்தியா? இதுதான் அருமையான விஷயம். நான் யார் என்று அட்டென்டரிடம் கேளுங்கள். அல்லது சேல்ஸ்மேனிடம் கேளுங்கள்... ஆகஸ்ட்-14 திருமாவளவனின் பிறந்தநாள் விழா. அதை முடித்துவிட்டு கேட்கிறோம். உங்களுடைய விருப்பப்படி கொடுங்கள்” என்று திருமாவளவன் பிறந்தநாள் விழாவை பயன்படுத்தி கேட்கிறார்.
“அதெல்லாம் ஒன்றும் பண்ண முடியாதுங்க” - இது சூப்பர்வைசர்
“நண்பா நாலு குவாட்டர் உனக்கு பெரிய விஷயமா?” - இது விசிக நிர்வாகி.
“எங்களுக்கு இது பெரிய விஷயம்தான்” என்கிறார் சூப்பர்வைசர்.
“சரிங்க, என்ன பண்ணுவீங்க... சொல்லுங்க... இல்ல என்ன பண்ண முடியும் என்று கேட்டேன்” என்கிறார் விசிக நிர்வாகி.
“எங்களால் எதுவும் பண்ண முடியாதுங்க”
“நண்பா முடிந்ததை பண்ணு நண்பா”
“எங்களால் எதுவும் பண்ண முடியாதுங்க”