“ஈயம் பூசுனமாதிரியும் இருக்கணும்; பூசாதமாதிரியும் இருக்கணும்” - திருமாவளவனின் பித்தலாட்டம் அம்பலம்!
“ஈயம் பூசுனமாதிரியும் இருக்கணும்; பூசாதமாதிரியும் இருக்கணும்” - திருமாவளவனின் பித்தலாட்டம் அம்பலம்!
விடுதலைப்புலிகளையும், இலங்கைத் தமிழர்களையும் வைத்து பிழைப்பு நடத்தும் தமிழக அரசியல்வாதிகளில் திருமாவளவன் முக்கியமானவர். இவர், விடுதலைப் புலிகளை அழித்து ஒழிப்பதற்கும், 1,75,000 அப்பாவி இலங்கை தமிழர்களை கொன்று குவிப்பதற்கும் காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியுடன் கொஞ்சம் கூட சொரணையே இல்லாமல் கூட்டணி வைத்து எம்பியாக தேர்வானார்.
வெற்றி பெற்ற பிறகு, விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாக திருமாவளவன் தொடர்ந்து நாடகமாடி வந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலையாளிகள், பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்திக்கு பாதுகாப்பு மாற்றியமைக்கப்பட்டது தொடர்பான பிரச்சினையை பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி எழுப்பியது. இந்தக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த பிரச்சனை எழுப்பப்பட்டது.
அப்போது பாராளுமன்றத்தில் பேசிய திமுக எம்பிக்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு, “விடுதலைப்புலிகளால் சோனியா காந்தியின் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த உச்சபட்ச பாதுகாப்பான எஸ்.பி.ஜி பாதுகாப்பை மீண்டும் வழங்க வேண்டும்” என்று உரத்த குரலில் முழங்கினார்.
விடுதலைப் புலிகளால் இன்னமும் சோனியா காந்தி உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று பாராளுமன்றத்தில் டி.ஆர்.பாலு ஒப்பாரி வைத்தபோது, அதே அவையில்தான் திருமாவளவனும், அவரது கட்சியைச் சேர்ந்த ரவிக்குமாரும் அமர்ந்து இருந்தனர். அவர்கள் டிஆர்.பாலுவின் பேச்சுக்கு எந்த வகையிலும் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை. கண்டித்து குரல் எழுப்பவும் இல்லை. அமைதியாக இருந்து ஆதரவு தெரிவித்தனர்.
இல்லாத விடுதலைப்புலிகளை இருப்பதாக சொல்லி, அதன் மூலம் சோனியா காந்தியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அப்பட்டமான ஒரு மோசடி பொய்யை, பாராளுமன்றத்தில் திமுக முன்வைத்தது தமிழர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.