எங்கே செல்லும் இந்த பாதை? பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கும் திருமாவளவன்! உலா வரும் வீடியோ!

எங்கே செல்லும் இந்த பாதை? பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கும் திருமாவளவன்! உலா வரும் வீடியோ!

Update: 2019-11-26 10:29 GMT

திருமாவளவன், இந்து தெய்வங்களை இழிவாக விமர்சித்துப் பேசியதற்கு நடிகை காயத்ரி ரகுராம் கடும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டார். “திருமாவளவனை எங்குபார்த்தாலும் இந்துக்கள், செருப்பால் அடிக்க வேண்டும்” என்று கருத்து பதிவிட்டு தனது கடும் கண்டனத்தை வெளிப்படுத்தினார்.


இதனைத்தொடர்ந்து திருமாவளவனின் கட்சியினர், காயத்ரி ரகுராமை தொலைபேசியில் தொடர்புகொண்டு மிகவும் ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் பேசினார்கள். அந்த தொலைபேசி உரையாடல்களை காயத்ரி ரகுராம், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இது திருமாவளவனின் கட்சியினரின் கீழ்த்தரமான நடவடிக்கைகளை மக்களுக்கு தோலுரித்து காட்டியது.


இதனைத்தொடர்ந்து நடிகை காயத்ரி ரகுராமை, கண்டித்து கருத்து வெளியிட்ட திருமாவளவன், ஒட்டுமொத்த நடிகைகளையும் “அவுத்துப் போட்டுவிட்டு ஆடுபவர்கள்” என்று மிக கீழ்த்தரமான, வக்கிரமான முறையில் விமர்சனம் செய்தார். இது ஒட்டுமொத்த பெண்களையும் இழிவு படுத்துகின்ற செயல் என்பதால், பெண்கள் மத்தியில் கடும் கண்டனத்திற்கு ஆளானார் திருமாவளவன்.


இது ஒருபுறம் இருக்க, சிறுவர்கள் மூலமும் நடிகை காயத்ரி ரகுராமை மிரட்டும் கீழ்தரமான செயல்களில் திருமாவளவன் ஈடுபட்டுள்ளார். அந்த பாலர்களுக்கு “எழுச்சித் தமிழன்” என்பதைக்கூட சரியாக உச்சரிக்க தெரியவில்லை. “எய்ட்ஸ் தலைவன்” என்று கூறுகின்றனர். அவர்கள் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.


அந்த பள்ளி சிறுவர்கள் கூறியதாவது:-


உனக்கு எல்லாம் அறிவு இருக்கிறதா இல்லையா? எய்ட்ஸ் (எழுச்சி) தமிழனை பற்றி பேசுகிறாயே, அவர் யார்னு உனக்கு தெரியுமா? அறிவு இல்ல? நடிகர் சங்கத்தில் சேர்ந்து இருக்கீங்க, அறிவு இல்லாத உங்களை எவன் சேர்த்தான் அங்க? அவர் எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா?





உனக்கு சூடு சொரணை இருக்குதா? எங்க தலைவரை பத்தி தப்பு தப்பா பேசுறீங்க. விடுதலை சிறுத்தைகள் தலைவர் அவர். அவர பத்தி தப்பாயெல்லாம் பேசாதீங்க.


அவரப் பத்தி சொன்னீங்கன்னா இதுக்கு மேல சும்மாயிருக்க மாட்டோம் நாங்க. உங்க அம்மாவுக்கு எல்லாம் அறிவு இருக்குதா இல்லையா? உங்க அம்மாவாவது, சொல்லிக் கொடுக்க வேண்டியதுதானே. உங்க பெரியப்பா, சித்தப்பாகிட்ட “சொல்லிகுடு சொல்லிகுடு சொல்லிகுடு”ண்ணு கையேந்தி கேட்கத்தானே. நீ போய் அறிவில்லாம எய்ஸ் தமிழனை (எழுச்சித்தமிழன்) பத்தி பேசுறியே, அவர் எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா உனக்கு?


காயத்ரி, நீ பெரிய இவளா என்ன? எங்க ஆணூருக்கு வா, நான் உனக்கு சொல்லி தரேன். உங்க பெரியப்பா, சித்தப்பால்லாம் கேட்க தேவையில்ல. இங்கு ஆணூருக்கு வந்தேன்னா, நான் உனக்கு சொல்லித் தருவேன். எயிட்ஸ் தமிழனை (எயிட்ஸ் தமிழனை) பத்தி திட்டுனா அவ்வளவுதான். விடுதலை சிறுத்தை, சும்மா இருக்க மாட்டோம்.


இவ்வாறு அந்த சிறுவர்கள் கூறியுள்ளனர்.


திருமாவளவன், தனது கட்சியினர் மூலம் காயத்ரி ரகுராமிற்கு மிரட்டல் விட்டார். கீழ்த்தரமான அர்ச்சனைகளை அரங்கேற்றினார்.  பெண்களை அனுப்பி காயித்ரி வீட்டுமுன் நின்று கீழ்தரமாக பேச வைத்தார்.


இதோடு நில்லாமல், சிறுவர்களை வைத்து காயத்ரி ரகுராமை மிரட்டி வருகிறார். இது என்னவிதமான அரசியல் என்றே தெரியவில்லை.


திருமாவளவனால் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகாக வருங்கால தலைமுறைகளை உருவாக்க முடியாது. அப்படி அவரிடம் எதிர்பார்க்கவும் முடியாது. ரவுடிகளையும், அடியாள்களையும்தான் உருவாக்க முடியும். இதுதான் சமீபத்திய சம்பவங்கள் உணர்த்துகின்றன.


பள்ளியில் படிக்கும் அறியாத வயது சிறுவர்களை தனது சுயநலத்துக்காக இப்படி பேச வைப்பது வருங்காலத்தில் இவர்கள் எந்த திசையை நோக்கி பயணிப்பார்கள் என்று குழந்தைகள் நல ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Similar News