கர்நாடக ஜனதாதள அரசு கவிழ்ந்தது இப்படித்தான் போட்டுடைத்த குமாரசாமி! அப்போ பா.ஜக.விற்கு சம்பந்தம் இல்லையா?

கர்நாடக ஜனதாதள அரசு கவிழ்ந்தது இப்படித்தான் போட்டுடைத்த குமாரசாமி! அப்போ பா.ஜக.விற்கு சம்பந்தம் இல்லையா?

Update: 2019-08-26 02:43 GMT

குமாரசாமி பேட்டி ஒன்றில் தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார். அவரின் முதல் எதிரி சித்தராமையா எனவும் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது :


சித்தராமையா தான் எனது முதல் எதிரி. நான் முதல்வர் ஆனது அவருக்கு பிடிக்கவில்லை. அவரால் அதை தாங்கி கொள்ள முடியவில்லை. தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை கூட்டணி அரசுக்கு எதிராக செயல்படும்படி தூண்டிவிட்டவர் சித்தராமையா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவுக்கு சித்தராமையாவே நேரடி காரணம்.
கூட்டணி நடைபெற வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் விரும்பியது. ஆனால் இது சித்தராமையாவுக்கு பிடிக்கவில்லை. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது எடுத்த சில முடிவுகளை அவரால் ஏற்க முடியவில்லை. அதனால் கூட்டணி அரசை கவிழ்க்க அவர் தொடர்ந்து சதி செய்து வந்தார்.


தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கும் சித்தராமையாவே காரணம். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக இருந்தவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருந்தபோதும், அதை சித்தராமையா அனுமதிக்கவில்லை. என்னை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்க சித்தராமையா விரும்பினார்.நான் முதல்வராக பதவி ஏற்ற நாள் முதலே, எனக்கு எதிராக அவர் கத்தியை கூர்தீட்டும் பணியில் ஈடுபட்டார்.


காங்கிரஸ் மேலிடத்தின் பேச்சுக்கும், சித்தராமையா மரியாதை கொடுக்கவில்லை. கூட்டணி ஆட்சியில் நான் முதல்-மந்திரியாக இருக்கவில்லை, காங்கிரசுக்கு கிளார்க்கை போல் பணியாற்றினேன். சித்தராமையா, தான் மீண்டும் முதல்வராக வேண்டும் என்று விரும்பினார். அதனால்தான் இவ்வளவு குழப்பங்கள். 14 மாதங்கள் காங்கிரசுக்கு அடிமை போல் வேலை செய்தேன. எனவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் குமாரசாமி .


கர்நாடக ஆட்சி கவிழ்ந்ததற்கு பா.ஜ.க தான் காரணம் அதிகார மிரட்டல் என கூறி வந்த பல அரசியல் தலைவர்கள் முகத்தில் காரி பூசியது போல் இந்த பேட்டி அமைந்துள்ளது.


Similar News