பாலம் சீரமைக்கும் பணி காரணமாக ஆற்று நீரில் மூழ்கிய தற்காலிக சாலை : சிப்காட் செல்லும் ஊழியர்கள் கடும் அவதி
பாலம் சீரமைக்கும் பணி காரணமாக ஆற்று நீரில் மூழ்கிய தற்காலிக சாலை : சிப்காட் செல்லும் ஊழியர்கள் கடும் அவதி
திருநீர்மலையில், அடையாற்றின் மேல், இரு வழிப்பாலம் ஒன்று உள்ளது. பம்மல், அனகாபுத்துார், தாம்பரம் பகுதிகளில் இருந்து, குன்றத்துார் செல்லும் வாகனங்கள், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டைக்கு செல்லும் கனரக வாகனங்கள், இதன் வழியாக சென்று வருகின்றன. அதிக போக்குவரத்து கொண்ட இந்த பாலம், பாதுகாப்பில்லாத நிலையில் இருந்தது என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து எழுந்த புகார்களை அடுத்து, அந்த பாலத்தை சரி செய்யும் பணி துவங்கியது.
இதனால் பாலத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் கடந்த மார்ச் மாதம் துவங்கியது. ஆனால், சில நாட்களிலேயே பாலம் புதுப்பிக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. மூன்று மாதங்களாக புதுப்பிக்கும் பணிகள் மீண்டும் துவங்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக பாலம் சீரமைக்கும் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்திற்கு மிக பெரிய இடையூறு ஏற்பட்டுள்ளது. பாலம் சீரமைக்கும் பணிகளின் காரணமாக, அடையாற்றின் குறுக்கே மக்கள் வாகனங்களை ஓட்டி செல்ல துவங்கினர். நாளடைவில் இதுவே தற்காலிக சாலையாக மாறியது. இதனால் அந்த வழியே பயணிக்கும் அலுவலகம் செல்பவர்களும் பொது மக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இது குறித்து, இரண்டு மாதங்களுக்கு முன்பே கதிர் செய்திகளில் பதிவிட்டிருந்தோம்.
இதையும் படிக்க : கிடப்பில் கிடக்கும் சென்னை திருமுடிவாக்கம் பாலம் சீரமைக்கும் பணிகள் : பொதுமக்கள் அவதி
மழை பெய்து, ஆற்றில் தண்ணீர் வந்தால் இந்த தற்காலிக சாலை மூழ்கும் நிலை ஏற்படும் என்றும், அலுவலகம் செல்பவர்கள் மேலும் அவதிக்குள்ளாவர்கள் என்றும் தொழிற்பேட்டைக்கு செல்லும் கன ரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும் என்றும் குறிப்பிட்டிருந்தோம்.