தமிழை வளர்க்கவே TNPSC பாடத்திட்ட மாற்றம் - தமிழ் புலமை மிக்கவர்களே main தேர்வை தாண்ட முடியும் - திமுகவின் பொய் பரப்புரைக்கு சரியான பதிலடி!
தமிழை வளர்க்கவே TNPSC பாடத்திட்ட மாற்றம் - தமிழ் புலமை மிக்கவர்களே main தேர்வை தாண்ட முடியும் - திமுகவின் பொய் பரப்புரைக்கு சரியான பதிலடி!
TNPSC GROUP II & II A புதிய பாட திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது ஒரு நல்ல முடிவு என போட்டித்தேர்வு பயிற்சி மையம் சார்பில் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், ஆங்கிலம் முதல் நிலை தேர்வில் இருந்து நீக்கப்பட்டு, பொது அறிவு கேள்விகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது . இதன் காரணமாக மனப்பாடம் செய்து தேர்வில் வெற்றி பெறுவது என்பது தடுக்கப்பட்டுள்ளது.ஒரு அரசு அதிகாரிக்கு என்ன தேவையோ அதை தேர்வு ஆணையம் பாடத்திட்டமாக கொடுத்துள்ளது.
இதனால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது எல்லாம் மேம்போக்கான பார்வை.இது போட்டி தேர்வு. இதில் யாருக்கும் பாரபட்சம் இல்லாமல் அனைவருக்குமான பாடத்திட்டம் கொடுக்கப்பட வேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கை இப்போது நிறைவேற்றப்பட்டு உள்ளது.
ஒரு குறிப்பிட்ட பட்டம் பெற்றால் எளிதாக TNPSC தேர்வில் வெற்றி பெற்று விடலாம் என்பது இனி முடியாது.முதன்மை தேர்வில் (MAIN EXAM) மொழிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த மொழி அறிவு OBJECTIVE TYPE கேள்வி அல்லாமல் DESCRIPTIVE TYPE கேள்விகளாக கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மொழி அறிவு அதிகம் ஏற்படும், குறையாது.
இந்த தேர்வு முறை மாற்றம் மூலம் தமிழக மாணவர்கள் பலர் பயனடைவர்.வெளி மாநில மாணவர்கள் இனி இந்த தேர்வில் வெற்றி பெற வாய்ப்பு மிக குறைவு. ஏனேனில் முதன்மை தேர்வில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இப்போது சொல்லுங்கள் இது யாருக்கு சாதகம்? இதனை அரசியலாக்க நினைத்து டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுகளில் இருந்து தமிழ் மொழிப்பாடம் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று தேர்வை பற்றி அடிப்படை புரிதல் கூட இல்லாமல் கருத்து தெரிவித்துள்ளார் கனிமொழி.