தக்காளி கிலோ 300 ரூபாய் - பாதாளத்தில் வீழந்த பாகிஸ்தான் பொருளாதாரம் : இந்தியாவை பகைத்துக்கொண்டதால் வந்த விளைவு!

தக்காளி கிலோ 300 ரூபாய் - பாதாளத்தில் வீழந்த பாகிஸ்தான் பொருளாதாரம் : இந்தியாவை பகைத்துக்கொண்டதால் வந்த விளைவு!

Update: 2019-08-13 04:56 GMT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த 370 வது பிரிவை நீக்கியதால் பாகிஸ்தான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது. இந்த கோபத்தில், அவர்கள் இந்தியாவுடனான வணிக உறவை முறித்துக் கொண்டனர். ஆனால், இந்த முடிவு பாகிஸ்தானில் பீதியை உருவாக்கியுள்ளது. இந்திய விவசாயிகளும், வர்த்தகர்களும் தங்கள் பொருட்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய மறுத்து விட்டனர். மேலும், இந்திய அரசாங்கம் சுங்க வரியை 200 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக, பாகிஸ்தானில் தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு 300 ரூபாயை எட்டியுள்ளது.


தக்காளியின் விலை மட்டுமல்ல, உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட பெரும்பாலான பச்சை காய்கறிகளின் விலையும் அங்கு உயர்ந்துள்ளன. அதாவது பெரும்பாலான அனைத்து காய்கறிகளின் விலை இரட்டிப்பாகியுள்ளது. பாகிஸ்தானின் காய்கறி சந்தையிலும் உருளைக்கிழங்கு விலை அதிகரித்துள்ளது.


இங்குள்ள அட்டாரி-வாகா எல்லையில் இருந்து தினமும் 75 முதல் 100 லாரிகள் தக்காளி சென்று கொண்டிருந்தன. ஆனால் தற்போது அது நிறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல பிற காய்கறிகள், பழங்கள், பருத்தி மற்றும் நூல் போன்றவற்றை ஏற்றுமதி செய்யும் வர்த்தகர்களும் பாகிஸ்தானுக்கு பொருட்களை அனுப்புவதை நிறுத்தி உள்ளனர் என கூறினார். பாகிஸ்தானுக்கு அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை ஏற்றுமதி செய்யும் டெல்லி ஆசாத்பூர் மண்டியில் உள்ள வர்த்தகர்கள், பாகிஸ்தானுக்கு பொருட்களை அனுப்ப வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர்.


Similar News