இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மாறு பரிசீலனை செய்ய சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சீராய்வு மனுவை, நாயர் சர்வீஸ் சொசைட்டி பீப்பிள் பார் தர்மா மற்றும் பல அமைப்புகள் இணைந்து தாக்கல் செய்தது. அயோத்தி வழக்கில் ராமனுக்காக வாதாடி ராமன் அருளால் வெற்றிவாகை சூடிய 92 வயது மூத்த வழக்கறிஞர் பராசரன் மற்றும் வைத்தியநாதன் இரண்டு பேரும் ஐயப்பனுக்காகவும் வாதாடினார்கள்.
அந்த வழக்கின் தீர்ப்பு நாளை (14.11.2019) வெளியாகிறது. அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்தான், இந்த வழக்கிலும் தீர்ப்பு வழங்குகிறார்.
ராம ஜென்ம பூமி வழக்கில் 100 கோடி இந்துக்களின் நம்பிக்கையான ஸ்ரீ ராமபிரான்அயோத்தியில்தான் பிறந்தார் என்ற நம்பிக்கையில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்களின் நம்பிக்கையை மனதார ஏற்றுக்கொள்கிறோம் என 5 நீதிபதிகளும் ஒரு மனதுடன் ஏற்றுக்கொண்டனர்.
சபரிமலை ஐயப்பன் வழக்கு இந்துகளின் நம்பிக்கை சார்ந்த ஒன்றே. அயோத்தியிலாவது இடம் தொடர்பான பிரச்சினையும் இருந்தது. ஆனால் சபரிமலை ஐயப்பன் வழக்கில் இந்துக்களின் காலம் காலமாக கடைபிடித்து வரும் நம்பிக்கை சார்ந்தது மட்டுமே. சபரிமலை சன்னிதானத்தில் குடிகொண்டிருக்கும் ஐயப்பன் நித்திய பிரம்மச்சாரி.
10 வயது முதல் 50 வயது வரை உள்ள இந்து பெண்கள் சபரிமலைக்கு செல்லக்கூடாது என்று எந்த இந்து ஆண்களும் தடைவிதிக்க வில்லை. ஆனால் காலம் காலமாக இந்து பெண்கள் தாங்களாகவே இதை ஒரு நடைமுறையாக பின்பற்றி வருகின்றனர்.
சபரிமலையைப் போன்றே பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் விழாவில் ஆண்கள் கலந்துகொள்வதில்லை. இக்கோவில், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலுக்கு அருகே 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு கண்ணகி அம்மனாக இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோயிலில் நடக்கும் பொங்கல் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் 10 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் கலந்துகொள்கிறார்கள்.
சபரிமலைக்கு போகவேண்டும் என்று எப்படி இதுவரை ஒரு இந்து பெண்ணும் உரிமைகோரவில்லையோ அதேபோலவே ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று எந்த ஒரு இந்து ஆணும் இதுவரை கொடிபிடிக்கவில்லை. காரணம் இவையெல்லாம் முழுக்க முழுக்க இந்துக்களின் நம்பிக்கை தொடர்பானவை.
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல வேண்டும் என்று கேட்டு வழக்கு தொடர்ந்தவர்கள்கூட இந்துக்கள் அல்ல. இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் நவுஷத் அகமது கான் என்பவர்தான் இந்த பொதுநல வழக்கை 2006-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவர் பிற மதத்தை சேர்ந்த மத நம்பிக்கை தொ்டர்புடைய விசயம் தொடர்பாக பொதுநல வழக்கு தொடர்கிறார். இதை எப்படி நீதிபதிகள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதே ஆச்ர்யமான ஒன்று. மனுதாரர் அவர் சார்ந்த மதம் தொடர்பாக பொதுநல வழக்கை தொடர்ந்திருந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம். அப்படியானால் மனுதாரரின் உள்நோக்கம் என்ன என்பது தொடர்பாக நீதிபதிகள் ஏன் கேள்வி கேட்கவில்லை?
எனவே, இதெல்லாம் இந்த வழக்கில் இந்துக்களின் மத நம்பிக்கைகளை, மத உணர்வுகளை சிதைக்க வேண்டும் என்ற உள்நோக்கம் வெட்டவெளிச்சம் ஆகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதுபோல, இந்த வழக்கு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த உடனேயே அதை நடைமுறை படுத்துவதற்காக கேரள கம்யூனிஸ்ட் முதல்வர் பிணராயி விஜயன் எடுத்துக்கொண்ட பகீரத பிரயத்தத்தில் ஒரு சிறு பகுதியைக்கூட அதே ஆண்டு, அதே உச்ச நீதிமன்றம் மலங்கரா சர்ச் தொர்பான தீர்ப்பில் காட்டவில்லை. அது கிறிஸ்தவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் என்றார். அவர் ஒரு கிறிஸ்தவர் என்பதால் இப்படி இரட்டை வேடம் போடுகிறார் என்ற குற்றச்சாட்டு எழாமல் இல்லை.
எனவே, இந்துக்களின் நம்பிக்கையை மற்றும் வழக்கு தொடர்ந்தவரின் உள்நோக்கம் இவைகளை கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கை ஐயப்ப பக்தர்கள் நம்புகின்றனர்.
இதேபோல ரபேல் தொடர்பான மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பும் நாளை (14.11.2019) வழங்கப்படுகிறது.