பல நூற்றாண்டுகளாக பயனுள்ளதாக இருக்கும் ரகசியம் என்ன?

துளசியின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி விளக்கம்.

Update: 2021-08-05 00:30 GMT

துளசியின் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக பல நூற்றாண்டுகளாகவே இது பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. துளசியில் வைட்டமின் A, வைட்டமின் D, இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து என பல ஊட்டச்சத்துக்களால் நிரம்பி வழிகிறது. இப்போது துளசியின் சுகாதார நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். மன அழுத்தத்தை குறைக்க உதவும் அடாப்டோஜன்கள் துளசியில் அதிக அளவில் உள்ளது. இது நரம்பு மண்டலத்தை தளரச் செய்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. தற்போது பலரும் இந்த மன அழுத்த நோயால் அவதிப்பட்டு வருவதால் துளசி இதற்கு ஒரு சிறந்த தீர்வாக அமையும். 


துளசி ஒரு சிறந்த அமில ரிஃப்லக்ஸாக அமைந்து சரியான pH அளவை பராமரிக்கிறது. எனவே செரிமானம் சம்பந்தமான நோய்களில் இருந்து விடுபட தினமும் மூன்றில் இருந்து நான்கு துளசி இலையை உணவிற்கு பிறகு மென்று வாருங்கள். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் மூலக்கூறுகள் துளசி இலைகளில் உள்ளது. மேலும் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளின் வளர்சிதை மாற்றத்தை உருவாக்கி, அதனை ஆற்றலாக மாற்றுகிறது. 


துளசியை வாயில் போட்டு மென்று வருவதால் அதிலுள்ள ஆன்டி பாக்டீரியல் பண்பானது வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து வாய் துர்நாற்றத்தை போக்குகிறது. மேலும் ஒரு நல்ல புத்துணர்ச்சியையும் தருகிறது. ஆன்டி ஆக்ஸிடன்டுகள் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் நிறைந்த துளசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. பாக்டீரியா மற்றும் வைரஸுகள் ஆகிய இரண்டையும் எதிர்த்து போராட தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை துளசி அளிக்கும். 

Input: https://www.careinsurance.com/blog/health-insurance-articles/remarkable-health-benefits-of-tulsi-leaves-you-must-know#:~:text=Tulsi%20has%20abundant%20amounts%20of,of%20sore%20throat%20and%20cold.

Image courtesy:wikipedia  


Tags:    

Similar News