உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதலில் ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்தை சேர்ந்த இரண்டு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற தாக்குதலின்போது வீடியோ கிராபர் பெய்ரி சாக்ர்ஷிவ்ஸ்கி 55, அதே போன்று ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் பத்திரிகையாளரான ஒலெக்சான்ட்ரா சாஷா குவ்ஷினோவா 24 ஆகிய இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களுடன் சென்ற மற்றொரு பத்திரிகையாளர் பெஞ்சமின் ஹால் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இருந்து வெளியேறி வரும்போது அவர்கள் வாகனத்தின் மீது குண்டு வீசப்பட்டதாக தெரிகிறது. இதில் கார் பற்றி எரிந்துள்ளது. பெஞ்சமின் தவிர மற்ற இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Hindu Tamil