ரேபரேலி தொகுதியிலும் மொத்தமாக காலியாகும் காங்கிரஸின் கூடாரம், 2 MLA - க்கள் பா.ஜ.க விற்கு தாவ திட்டம் !

ரேபரேலி தொகுதியிலும் மொத்தமாக காலியாகும் காங்கிரஸின் கூடாரம், 2 MLA - க்கள் பா.ஜ.க விற்கு தாவ திட்டம் !

Update: 2019-10-05 05:37 GMT

உத்திர பிரதேசத்தின் சட்டமன்றத்தில் 403 உறுப்பினர்கள் உள்ளனர். 7 சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸின் சார்பில் உள்ளனர். அதில் 2 உறுப்பினர்கள் ரேபரேலி பகுதியை சார்ந்தவர்கள். ராகேஷ் சிங் மற்றும் அதிதி சிங் இருவரும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள். இருவரும் பா.ஜ.க விற்கு தாவ காத்துகொண்டு இருக்கின்றனர்.


கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி, யோகி தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தை காங்கிரஸ் புறக்கணித்தது. யோகியின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்ப்பதாக கூறியது. காங்கிரஸ் கட்சியின் முடிவை மீறி அதிதி சிங் சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்றார். யோகி அரசின் வளர்ச்சி திட்டங்களை வெகுவாக பாராட்டினார். அதே நாளில் பிரியங்கா வத்ராவின் தலைமையில் லக்னோவில் நடைபெற்ற பாதயாத்திரையை புறக்கணித்தார். பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, எது சரி என்று தோன்றியதோ, அதை செய்ததாகவும், மேலிடம் எந்த முடிவை எடுத்தாலும் அதை ஏற்பதாகவும் கூறினார்.


ராகேஷ் சிங், கடந்த ஒரு வருடமாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற பல கூட்டங்களை புறக்கணித்தார். பா.ஜ.க உடன் அவரின் நெருக்கம் அதிகமாகி வருகிறது. ரேபரேலி, சோனியாவின் தொகுதி என்பதால் அவரின் முடிவிற்கு கட்சி காத்துகொண்டு இருக்கிறதாக தெரிகிறது. சமீபத்தில் காங்கிரஸின் MP ராமகாந்த் யாதவ் சம்ஜவாதி கட்சிக்கு தாவியது குறிப்பிடத்தக்கது.


Source : Swarajya Article


Similar News