தி.மு.க சுவரொட்டிகளில் சுருங்கிய ஸ்டாலின், பெருத்த உதயநிதி - குமுறும் உடன் பிறப்புகள்!

தி.மு.க சுவரொட்டிகளில் சுருங்கிய ஸ்டாலின், பெருத்த உதயநிதி - குமுறும் உடன் பிறப்புகள்!

Update: 2019-09-02 02:10 GMT

தி.மு.க-வின் சுவரொட்டி மற்றும் Flex பேனர்களில் நடக்கும் அரசியல் தற்போது தி.மு.க தொண்டர்கள் மத்தியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி நன்கு செயல்பட்டுக்கொண்டிருந்த வரை அவரே தி.மு.க என்னும் காட்டுக்கு சிங்க ராஜாவாக வாழ்ந்து வந்தார். ஆயினும் அண்ணா மறைந்து 50 ஆண்டுகள் ஆன பின்னரும் கருணாநிதி அண்ணாவுக்கான மரியாதையை தன் கடைசி பேச்சு இருக்கும் வரை செவ்வனே செய்தார் என்று சொல்லலாம். கருணாநிதியின் பேச்சு நின்றது, ஸ்டாலின் செயல் தலைவர் ஆன பின்னர் கருணாநிதியின் படங்களை விட ஸ்டாலினின் படங்கள் போஸ்டர்களில் பெரிய சைஸ்ஸில் ஆக்கிரமித்தன. 


இப்போது ஸ்டாலினின் படம் சிறியதாக்கப்பட்டு மூன்றாம் கலைஞர் என்று நெட்டிசன்கள் கலாய்க்கும் உதயநிதி ஸ்டாலினின் படங்களும், மூன்றாம் அன்பிலார் என்று கூறப்படும் அன்பில் மகேஷ் படங்களும் பிரதானமாகி வருவதாக குமுறுகின்றனர் உடன் பிறப்புகள். ஆனால், ஸ்டாலினோ இப்போதே பெரியார், அண்ணா, கலைஞர் வரிசையில் ஸ்டாம்ப் சைசுக்கு ஆக்கப்பட்ட அவலம் ஸ்டாலினுடன் இருப்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறதாம்.


இத்தனைக்கும் ஸ்டாலின் இன்னும் முதல்வராக கூட ஆகவில்லை. அதற்குள் அவருக்கு "ஸ்டாம்ப்" ப்ரமோஷன் கொடுக்கும்  “மூன்றாம்” பட்டத்தினரின் வேகம் உடன் பிறப்புகளின் வயிற்றில் புளி கரைக்கின்றதாம்.  


இது எங்கே போய் முடியுமோ, இந்த நிலை நீடித்தால் எடப்பாடி மகன் கூட முதல்வராகும் வரை ஆகிவிடுமோ என அச்சம் மேலிடுகின்றதென அங்கலாய்க்கின்றனர் உடன் பிறப்புகள்.


Similar News