உதயநிதியை வரவேற்று அழகிரி படத்துடன் போஸ்டர்! ஸ்டாலினை வெறுப்பேற்றிய அழகிரி ஆதரவாளர்கள்! தர்ம யுத்தத்திற்கு தயாராகிறாரா அழகிரி?
உதயநிதியை வரவேற்று அழகிரி படத்துடன் போஸ்டர்! ஸ்டாலினை வெறுப்பேற்றிய அழகிரி ஆதரவாளர்கள்! தர்ம யுத்தத்திற்கு தயாராகிறாரா அழகிரி?
தி.மு.க இளைஞரணி செயலாளராக ஸ்டாலின் மகன் உதயநிதி முடிசூட்டப்பட்டுள்ளார். ஆனால் அதேநேரம் மு.க. அழகிரி தி.மு.கவில் இருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மதுரை வந்துள்ள உதயநிதிக்கு அழகிரியின் தீவிர ஆதரவாளரான நாகூர் கனி உள்ளிட்ட சிலர், உதயநிதியை வரவேற்று மதுரையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த போஸ்டரில், “உங்கள் பெரியப்பா அழகிரியின் கோட்டைக்கு வரும் உதயநிதி ஸ்டாலினை வருக வருக என வரவேற்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு இந்த போஸ்டரில் அழகிரியின் படம் பெரிய அளவில் இடம்பெற்றுள்ளது. ஆனால் ஸ்டாலின் படம் இல்லை.
இது தி.மு.க தலைவர் ஸ்டாலினை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதுமட்டுமல்ல அவரை வெறுப்படையவும் செய்துள்ளது.
சமீப காலமாக அமைதியாக இருந்த அழகிரி, தற்போது, தர்ம யுத்தத்தை தொடங்கி உள்ளார் என்றே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். விரைவில் அவர் தனது அடுத்த அவதாரத்தை வெளிக்காட்டுவார் என்கின்றனர் அழகிரி ஆதரவாளர்கள்.