"காரப்பன் இந்து விரோத பேச்சுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" - வானதி சீனிவாசன் விளக்கம்!

"காரப்பன் இந்து விரோத பேச்சுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" - வானதி சீனிவாசன் விளக்கம்!

Update: 2019-10-19 04:32 GMT

கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகையை ஊரை சேர்ந்தவர் காரப்பன். இவர் "காரப்பன் சில்க்ஸ்" எனும் துணிக்கடையில் உரிமையாளராக உள்ளவர். கடந்த மாதம்(செப்டம்பர் 2019) 29-ஆம் தேதி, கோவையில் திராவிடர் இயக்க தமிழர் பேரவை சார்பில் நடந்த கூட்டம் ஒன்றில் இந்துக் கடவுள்களான அத்திவரதர், கிருஷ்ணர் குறித்து கீழ்த்தரமாக விமர்சித்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி இந்துக்களை கொதிப்படைய செய்தது.


இந்நிலையில் தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் காரப்பனுடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு இந்து கடவுள்களுக்கு எதிராக பேசியவரை ஏன் அவர் ஆதரிக்க வேண்டும் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டது.


இது குறித்து வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கத்தை அளித்துள்ளார். அதில் "ஓவ்வொரு வருடமும் கோவையில் கைத்தறி தினத்தை ஒட்டி 20000 மாணவர்களை தொடர்பு கொள்ளும் நிகழ்வில் பல்வேறு நெசவாளர்களையும் அழைக்கிறோம். அந்த வகையில் காரப்பனும் கலந்து கொண்டுள்ளார் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. அவர் பேச்சுக்கு நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று பதிவிட்டுள்ளார்.




https://twitter.com/VanathiBJP/status/1185147589924028416?s=20

Similar News