தன்னை பற்றிய வதந்தி பரப்புவர்களுக்கு வானதி சீனிவாசன் பதிலடி !

Breaking News.

Update: 2021-09-12 15:45 GMT

கோவை தெற்கு சட்டமன்ர தொகுதி உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன் சமீபத்தில் நடந்த காணொலி கூட்டம் ஒன்றில் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் அவர் பங்கேற்கும் போது அவரின் பின் புறத்தில் கவுண்டிங்க் மிஷின் ஒன்று இருந்தது. இதற்கு சிலர் அவரை விமர்சித்து வந்தனர். இணையத்தில் மிகவேகமாக இந்த புகைப்படம் பகிரப்பட்டு விமர்சனங்கள் எழுந்து வந்தது.

தற்போது அவர்கள் அனைவருக்கும் பதில் கூறும் விதமாக வானதி சீனிவாசன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில் ரேஸ்கோர்ஸ் மக்களை சந்தித்து விட்டு வீட்டிற்கு வர இயலாததால் என்னுடைய நண்பரின் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி கூட்டத்தில் கலந்து கொண்டேன். அது எனது அலுவலகம் அல்ல அங்கு இருந்த கவுண்டிங்க் மிஷின் பற்றி எனக்கு தெரியாது. அதற்குள் சிலர் இந்த புகைபடத்திற்கு தங்களின் கற்பனை சிறகுகளை விரித்துள்ளனர் என அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்

Source: News 18 Tamil

Tags:    

Similar News