வாரணாசி ( காசி ) ரயில் நிலையத்தில் இனி தமிழ் மொழியில் அறிவிப்பு! அதிகாரிகள் தகவல்.!
வாரணாசி ( காசி ) ரயில் நிலையத்தில் இனி தமிழ் மொழியில் அறிவிப்பு! அதிகாரிகள் தகவல்.!
பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசி ( காசி ) ரயில் நிலையத்தில் கூடிய விரைவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் அறிவிப்புகள் வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தி தெரியாத தென்னிந்திய மக்கள் புனித நகரமான வாரணாசிக்கு இலட்சக்கணக்கில் வருகை தருவதால் அவர்களின் வசதிக்கு ஏற்ப இந்த புது முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று ரயில்வே மண்டல இயக்குனர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார். அவர்களில் பெரும்பாலோருக்கு இந்தி தெரியாததால் பல இடங்களில் சிரமப்படுகின்றனர்.
எனவே, அவர்களின் வசதிக்காக, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் விரைவில் அறிவிப்புகளை வெளியிடுவோம். முதற்கட்டமாக இந்த நான்கு மொழிகளில் அறிவிப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இம்மாத இறுதிக்குள் இது அமலுக்கு வரும். இது முதலாவதாக பிரதமரின் தொகுதியான வாரணாசியில் இருந்து தொடங்கப்படுகிறது. படிப்படியாக மற்ற ரயில் நிலையங்களிலும் கொண்டு வரப்படும்.
அதுதவிர, மக்களுக்கு நேரடியாக சேவை வழங்கும் பொருட்டு ரயில் நிலையத்தில் உதவி மேசையையும் அமைத்து வருகிறோம். ரயில் நிலையத்தில் ஒரு தொலைக்காட்சித் திரையும் வைக்கப்படும்' என்று கூறியுள்ளார்.