பாகிஸ்தான் போலீஸ் எப்படி இந்திய இராணுவம் ஆகும்.? அடிப்படை அறிவு கூட இல்லாமல் பரப்பப்படும் பொய் செய்தி - தமிழகத்தில் பாதி இப்படித்தான்!

பாகிஸ்தான் போலீஸ் எப்படி இந்திய இராணுவம் ஆகும்.? அடிப்படை அறிவு கூட இல்லாமல் பரப்பப்படும் பொய் செய்தி - தமிழகத்தில் பாதி இப்படித்தான்!

Update: 2019-09-24 13:32 GMT

சமீபத்தில் பேஸ்புக் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ஒரு பெண்ணை அதிகாரிகள் தாக்குவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.


இதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பிரிவினைவாதிகள், "பாருங்கள் காஷ்மீரில் இந்திய இராணுவம் பெண்களை எப்படி தாக்குகிறது என்று, இதற்கு ஒரு நியாயம் வேண்டாமா.? மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டாமா.? என்று பதிவிட்டு இருந்தனர்.


அந்த வீடியோவை ஆராய்ந்து பார்த்தால், பெண்ணை தாக்கும் அதிகாரியின் உடையில் பாகிஸ்தான் கொடி இருப்பது தெளிவாக தெரிகிறது. இது தொடர்பாக மேலும் தேடி பார்த்த பொழுது அது பாகிஸ்தான் காவல்துறையினர் அணியும் உடை என்பது தெரியவந்துள்ளது.


பெண்ணை தாக்கும் சம்பவம் பாகிஸ்தான் நீதிமன்ற வளாகத்தில் நடந்துள்ளது. இதற்கான ஆதாரங்கள் youtube வீடியோவாக ஏற்கனவே வெளியாகி இருக்கிறது. இதனை தான் இந்தியாவில் நடந்ததாக சித்தரித்து போலி செய்தி வெளியிட்டுள்ளார் பிரிவினைவாதிகள். காஷ்மீரில் இன்டர்நெட் தடை செய்த போது, ஜனநாயகத்தின் மீது அடக்குமுறை என்று கூச்சலிட்ட தமிழக திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதற்காக தடை செய்கிறார்கள் என்பதை இந்த சம்பவத்தை பார்த்தாவது திருந்த வேண்டும்.






Similar News