நயன்தாராவின் 65-வது படத்தில் விக்னேஷ் சிவன் வைத்த ட்விஸ்ட்.? பிறந்த நாள் அதுவுமா இன்ஸ்டகிராமில் அனல் கிளப்பிய புகைப்படம்.!

நயன்தாராவின் 65-வது படத்தில் விக்னேஷ் சிவன் வைத்த ட்விஸ்ட்.? பிறந்த நாள் அதுவுமா இன்ஸ்டகிராமில் அனல் கிளப்பிய புகைப்படம்.!

Update: 2019-11-18 13:53 GMT

பிரபல நடிகை நயன்தாரா தனது 35-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். திரையுலகினர், ரசிகர்கள் எனப் பலரும் அவருக்குச் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.


இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நியூயார்க்கில் தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் நயன்தாரா. இது தொடர்பான இரு புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டகிராம் தளத்தில் வெளியிட்டுள்ளார்.


விஸ்வாசம், ஐரா, மிஸ்டர் லோக்கல், கொலையுதிர் காலம், பிகில் என இந்த வருடம் நயன்தாரா நடித்த ஐந்து தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன. ரஜினி நடிக்கும் தர்பார் படத்தில் தற்போது நடித்து முடித்துள்ள நயன்தாரா, அடுத்ததாக இரு படங்களில் நடித்து வருகிறார்.


நயன்தாராவின் 65-வது படமான நெற்றிக்கண்ணை விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மிலிந்த் ராவ் இப்படத்தை இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு சித்தார்த் நடித்த அவள் படத்தை இயக்கினார்.


கதாநாயகி கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டுள்ள இப்படத்துக்கு இசை - கிரிஷ். அடுத்ததாக, ஆர்ஜே பாலாஜி - சரவணன் இயக்கும் மூக்குத்தி அம்மன் என்கிற படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார் நயன்தாரா.




https://www.instagram.com/p/B49EPo7BtoF/?utm_source=ig_web_copy_link

Similar News