விஜய் ஆண்டனி நடித்து வரும் "காக்கி" திரைப்படத்தின் அப்டேட்!!

விஜய் ஆண்டனி நடித்து வரும் "காக்கி" திரைப்படத்தின் அப்டேட்!!

Update: 2019-08-23 05:49 GMT

இயக்குனர் ஏ. செந்தில்குமார் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகி வரும் "காக்கி" திரைப்படத்தின் உரிமைகளை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வாங்கியுள்ளது.


இப்படத்தில் விஜய் ஆன்டனி, சத்யராஜ், ஸ்ரீகாந்த், இந்துஜா, ஈஸ்வரி ராவ், ஜான் விஜய்,
ரவி மரியா சன் டிவி புகழ் கதிர்,ஆகியோரை முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.


ஜூன் மாதத்தில் துவங்கி ஏறத்தாழ 50 சதவீத படப்பிடிப்பு ஷிமோகா , பெங்களூரு, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்ற முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.


இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வேலைகள் அக்டோபர் மாதத்தில் நிறைவு பெறும் என் எதிர்பார்க்கப்படுகிறது.


இயக்குனர் ஏ.செந்தில் குமார் இயக்கத்தில், பிரபலமான ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஸாவின் ஒளிப்பதிவில், அவ்கத் இசையில், 'கவிப்பேரரசு' வைரமுத்துவின் பாடல் வரிகளில், கனல் கண்ணன் - ஷியாம் - ன் அதிரடி காட்சி அமைப்பில், தயாராகும் இப்படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு பொறுப்புகளை கவனித்துக் கொள்கிறார்.


இப்படம் அதிரடி காட்சிகளின் பின்னணியில் உருவாகி வரும் ஒரு ஜனரஞ்சகமான குடும்பப் பாங்கானப் பொழுதுபோக்குப் படமாகும்.


ஜனவரி 2020ல் இப்படத்தை வெளியிட உள்ளதாகவும் . "பர்ஸ்ட் லுக்" போஸ்டர் இந்த ஆண்டு செப்டம்பர் மாதமும், டீசர் | டிரைலரை அக்டோபர் மாதமும் வெளியிட இப்படக்குழு முடிவு செய்திருக்கிறது.


Similar News