விஜயின் பிகில் இசை வெளியீட்டு விழா பரிதாபங்கள்! வைரலானது கண்ணீர் வீடியோ!!
விஜயின் பிகில் இசை வெளியீட்டு விழா பரிதாபங்கள்! வைரலானது கண்ணீர் வீடியோ!!
நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் அருகே சோமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று நடந்தது.
இதில் நடிகர் விஜய், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகை நயன்தாரா உள்பட ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்துகொள்வதாக ஏற்கனவே விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது.
இதனால், இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆயிரம், இரெண்டாயிரம் என பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி ரசிகர்கள் குவிந்தனர்.
சென்னையில் இருந்து மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் வந்தனர். கேரளாவில் இருந்தும் வந்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட ரசிகர்களும் மதியம் முதலே தாம்பரத்தில் குவியத்தொடங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மாலை நேரத்திலிருந்து போக்குவரத்து நெரிசல் அதிகமானது. தாம்பரம் முதல் சோமங்கலம் வரை போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள், கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். ஆம்புலன்ஸ் வாகனமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவித்தது.
இது ஒருபுறம் இருக்க, 10000 இருக்கைகள் கொண்ட அரங்கத்தில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் மனசாட்சியே இல்லாமல் 20000 ஆயிரம் டிக்கெட்டுகளை விநியோகித்துள்ளனர் அதுவும் பணத்திற்கு விற்றுள்ளனர். அனைவருமே விஜயின் தீவிர ரசிகள்தான் டிக்கெட்டுகளை பணம் கொடுத்து வாங்கியுள்ளனர்.
20000 டிக்கெட்டுகளை விற்றுவிட்டு, 10000 இருக்கைகளுடன் அரங்கத்தை தயார் செய்திருந்தது மிகப்பெரிய பித்தலாட்டம். இது திட்டமிட்டே செய்யப்பட்டது என்கின்றனர் விவரமறிந்தவர்கள்..