பட விளம்பரத்திற்காக விஜய் ரசிகர்கள் செய்த அநாகரிகமான செயல்! வெளிப்பட்ட குட்டு.!

பட விளம்பரத்திற்காக விஜய் ரசிகர்கள் செய்த அநாகரிகமான செயல்! வெளிப்பட்ட குட்டு.!

Update: 2019-10-25 08:42 GMT

இன்று அதிகாலை பிகில் பட சிறப்புக் காட்சி வெளியானது. அதற்கு முன்பாக நள்ளிரவு காட்சியில் சிறப்புக் காட்சி வெளியாகும் என எதிர்பார்த்த கிருஷ்ணகிரி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்ததால் அவர்கள் கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே உள்ள தியேட்டர் அருகே போலீசாரின் தடுப்புக்களையும், சிசிடிவி கேமிராக்களையும் உடைத்தனர். கல்வீச்சில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 34 பேரை பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.!




http://kathir.news/2019/10/25/actor-vijay-teaches-cinema-fans-outside-routing/


இது குறித்து அங்கு ஆய்வு செய்த கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:


கிருஷ்ணகிரி ஏரியா அமைதியான ஏரியா, இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது கிடையாது இப்போது விஜய் ரசிகர்கள் இந்த செயலில் வேண்டுமென்றே ஈடுபட்டுள்ளது போன்று தெரிகிறது. அதுமட்டுமில்லாமல்


இது படத்தின் வியாபாரத்தை உயர்த்துவதற்காக திட்டமிடப்பட்ட சதி போன்று இச்சம்பவம் தெரிகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் வேற மர்ம நபர்கள் வேறு யாராவது ஈடுபட்டு உள்ளார்களா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றோம்.


என கூறினார் .


Similar News