“100 சதவீத கடனையும் அடைத்துவிடுகிறேன், ஏற்றுக்கொள்ளுங்கள்” - விஜய் மல்லையா மீண்டும் கெஞ்சல்!!
“100 சதவீத கடனையும் அடைத்துவிடுகிறேன், ஏற்றுக்கொள்ளுங்கள்” - விஜய் மல்லையா மீண்டும் கெஞ்சல்!!
பண மோசடி வழக்கில் சிக்கிய விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வர, நரேந்திர மோடி அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் இருந்து தப்பிப்பதற்காக விஜய் மல்லையா பல் வேறு வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், தப்பிவிடலாம் என்று கணக்கு போட்டார். ஆனால் அத நடக்காமல் போய்விட்டது.
இதற்கிடையில் கடந்த வாரம் லோக்சபாவில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறி இருந்தார்.
இந்நிலையில் மல்லையா தனது டுவிட்டரில், “எனது 100 சதவீதம் கடனையும் திருப்பிச் செலுத்துகிறேன். எனது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று மீண்டும் மோடி அரசுக்கு கெஞ்சல் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு முன்பு ஒருமுறை கடனை திருப்பி அடைக்க தயாராக இருக்கிறேன் என்று கெஞ்சினார் என்பது குறிப்பிடத்தக்கது.