காஷ்மீரில் ஆப்பிள் தோட்டங்கள் அழிக்கப்படுகிறதா.? வைரலாக பரவி வரும் போலி வீடியோ - வெளியான உண்மை நிலவரம்.!

காஷ்மீரில் ஆப்பிள் தோட்டங்கள் அழிக்கப்படுகிறதா.? வைரலாக பரவி வரும் போலி வீடியோ - வெளியான உண்மை நிலவரம்.!

Update: 2019-08-30 13:31 GMT

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை காஷ்மீர் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்துள்ள சூழலில் பீதியை கிளப்பும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.


ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 370 சட்டப்பிரிவு திரும்பப் பெறப்பட்டதில் இருந்து ஜம்மு காஷ்மீர் பற்றி பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இவற்றில் சில பதிவுகள் உண்மையாகவும், சில பதிவுகள் போலியாகவும் இருக்கின்றன.


அவ்வாறான பதிவு ஒன்றில், காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின் பொது மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்றும், காஷ்மீரில் உள்ள ஆப்பிள் தோட்டங்கள் அழிக்கப்படுவதாக ஒரு போலி தகவல் பரவி வருகிறது.


46 நிமிடம் ஓடும் அந்த வீடியோவில், ஆப்பிள் மரம் வெட்டப்படும் காட்சி இடம்பெறுகிறது. இதனை சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு, காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு திரும்ப பெறப்பட்ட உடனே ஆப்பிள் தோட்டங்கள் அழிக்கப்படுகின்றன என்று கூறியிருந்தனர். இதனை உண்மை என்று நம்பி பலரும் பகிர்ந்திருந்தனர். ஆனால் அது போலி என்பது தெரிய வந்துள்ளது.




https://twitter.com/PBNS_India/status/1166950497795788802?s=19


உண்மையாக அந்த சம்பவம் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. அதுவும் கடந்த 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ அது. ஒரு சில காரணங்களுக்காக ஹிமாச்சல பிரதேச அரசே மேற்கொண்ட நடவடிக்கை அது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை, காஷ்மீரில் நடந்ததாக சித்தரித்துள்ளனர். ஒரு செய்தியை பகிரும் முன் அதன் உண்மை தன்மை அறிந்து பகிர்வது அவசியமாகிறது.




https://twitter.com/PBNS_India/status/1166950497795788802

Similar News