31-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் விராட் கோலி.!
31-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் விராட் கோலி.!
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் மற்றும் இந்தியா கிரிக்கெட் அணியின் கேப்டனுமான விராட் கோலிக்கு இன்று 31-வது பிறந்தநாள்.
இந்தியா அணியின் 3 பிரிவிற்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) கேப்டனாக இருப்பவர் விராட் கோலி.
மேலும் அவர் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்பவர். அவர் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் அபாரமான ஆட்டத்தை விளையாடி வருகிறார்.
அவர் மேலும் பல சாதனைகளை படைத்து வேறு எந்த பேட்ஸ்மேனுக்கும் ஈடு கொடுக்க முடியாத அளவுக்கு உச்சத்தில் இருந்து வருகிறார். பேட்டிங்கில் மட்டுமல்லாமல் கேப்டன் பதவியிலும் அவர் மிகவும் சிறப்பான நிலையில் இருக்கிறார்.
இந்த நிலையில் விராட் கோலி தனது 31-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவர், மனைவி அனுஷ்கா சர்மாவுடன் நேபாளத்தில் இருக்கிறார். அங்குள்ள மக்களை சந்தித்து அவருடைய பொழுதை போக்கி மகிழ்ச்சியுடன் இருந்து வருகிறார்.
வங்காளதேசத்துக்கு எதிரான டி 20 போட்டியில் ஓய்வு பெற்றுள்ளார். ஆனால் அவர் 2 டெஸ்ட் தொடர்களில் கோலி விளையாடுகிறார். அப்போது அவர் அணியுடன் இணைந்து கொள்வார்.
விராட் கோலி சர்வதேச போட்டிகளில் 21 ஆயிரத்து 36 ரன் அடித்துள்ளார் . 82 டெஸ்டில் விளையாடி 7,066 ரன்னும் (26 சதம், 22 அரை சதம்), 239 ஒரு நாள் போட்டியில் விளையாடி 11,520 ரன்னும் (43 சதம், 54 அரை சதம்) அடித்துள்ளார்.
72 20-ஓவரில் போட்டி விளையாடி 2,450 ரன் அடித்துள்ளார். 22 அரை சதம் இதில் அடங்கும். 20 ஓவர் தொடர்களில் அவர் இதுவரை சதம் அடிக்கவில்லை.