விளையாடிவிட்டு பேட்டை கொடுக்காமல் ஓடிய விராட் கோலி; துரத்திப் பிடித்த சிறுவர்கள் - வைரல் வீடியோ!
விளையாடிவிட்டு பேட்டை கொடுக்காமல் ஓடிய விராட் கோலி; துரத்திப் பிடித்த சிறுவர்கள் - வைரல் வீடியோ!
இந்தியா கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சிறுவர்களுடன் மகிழ்ச்சியாக கிரிக்கெட் விளையாடினார். அந்த புகைப்படங்கள் நேற்று சமூக வளையதளத்தில் வைரலானது.
விளம்பர படம் படப்பிடிப்பு ஒன்றின் போது விராட் கோலி சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். சிறிய நேரம் பேட்டிங் விளையாடிய கோலி, பின்னர் அந்த பேட்டை சிறுவர்களிடம் தராமல் ஓடினார். அவரை துரத்தி சென்ற சிறுவர்களிடம் ஓடி விளையாடினார். பின்னர் கோலி சிறுவர்களிடம் பேட்டை கொடுத்தார். அவர் மகிழ்ச்சியாக ஓடி விளையாடிய வீடியோ தற்போதுசமூக வளையதளத்தில் வைரலாகி வருகிறது.