கரோனாவால் பாதிக்காத விஷ்ணு விஷாலின் திரைப்படம்!
கரோனாவால் பாதிக்காத விஷ்ணு விஷாலின் திரைப்படம்!;
கரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு படங்களின் பணிகள் முடங்கியுள்ள நிலையில், விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'எஃப்.ஐ.ஆர்.' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மட்டும் நடைபெற்று வருகிறது. அறிமுக இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தினை விஷ்ணு விஷாலே தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்ட நிலையில், இந்த ஊரடங்கைப் பயனுள்ளதாக மாற்றி இப்படத்தின் படதொகுப்பாளரான ஜீ.கே.பிரசன்னா வீட்டிலிருந்த படியே இதன் படதொகுப்பை மேற்கொண்டு வருகிறார். இதனைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.