விஸ்வாசத்திடம் தோற்றது பிகில்! டுவிட்டர் அதிகாரப்பூர்வ கருத்துகணிப்பு முடிவை வெளியிட்டது!

விஸ்வாசத்திடம் தோற்றது பிகில்! டுவிட்டர் அதிகாரப்பூர்வ கருத்துகணிப்பு முடிவை வெளியிட்டது!

Update: 2019-11-14 07:07 GMT

2019-ஆம் ஆண்டில் இந்திய அளவில் நடிகர் அஜித் நடித்து வெளியான விஸ்வாசம் படம் முதலிடத்தில் இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து நடிகர் விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுக்கும் வகையில் டுவிட்டரில் சண்டையை தொடங்கினர்.


இந்த நிலையில் “டுவிட்டர் இந்தியா” நிறுவனம் புதிய கருத்துக்கணிப்பு ஒன்றை அறிவித்தது. அதாவது அஜித்தின் விஸ்வாசம், விஜயின் பிகில், சூர்யாவின் என்.ஜி.கே, இவற்றில் எந்த படத்திற்கு உங்கள் ஓட்டு என்ற அடிப்படையில் அந்த கருத்துக்கணிப்பு நடந்தது.





நேற்று (13.11.2019) இரவுடன் இந்த கருத்துக்கணிப்பு முடிவுக்கு வந்தது. இதில் 255,228 பேர் கலந்துகொண்டு வாக்களித்துள்ளனர்.


இதில், அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு 44% வாக்குகளும், விஜயின் பிகில் படத்திற்கு 40% வாக்குகளும், சூர்யாவின் என்.ஜி.கே படத்துக்கு 14% வாக்குகளும் பதிவாகி இருந்தது.




https://twitter.com/TwitterIndia/status/1194498911957729282


இந்த கருத்துக் கணிப்பின் மூலம் அஜித்தின் விஸ்வாசம் படம் வெற்றி வாகை சூடியது. விஜயின் பிகில் படம் தோல்வியை தழுவியது.


இது விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு தோல்வியை கொடுத்துள்ளது.


Similar News