வாளையாரில் அடுத்தடுத்து கற்பழித்து கொலை செய்யப்பட்ட அக்கா, தங்கை - குற்றவாளிகளை வெளியே தப்ப விட்டு வேடிக்கை பார்க்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசு : நியாயத்துக்காக போராடும் பா.ஜ.க எம்.பி..!
வாளையாரில் அடுத்தடுத்து கற்பழித்து கொலை செய்யப்பட்ட அக்கா, தங்கை - குற்றவாளிகளை வெளியே தப்ப விட்டு வேடிக்கை பார்க்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசு : நியாயத்துக்காக போராடும் பா.ஜ.க எம்.பி..!
கடந்த 2017 ஆம் ஆண்டு கேரளாவில் அக்கா, தங்கை கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் 3 குற்றவாளிகள் போதிய ஆதாரம் இல்லாததை காரணம் காட்டி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையார் அருகே உள்ள அட்டப்பள்ளத்தை சேர்ந்தவர் ஷாஜி. இவரது மனைவி பாக்கியம். இவர்களுக்கு 11 வயதான திருப்தி என்ற மகளும், 9 வயதான சரண்யா என்ற மகள்கள் இருந்தனர்.
திருப்தி அங்குள்ள அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பும், சரண்யா 5 ஆம் வகுப்பும் படித்து வந்தனர். கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி திருப்தி வீட்டின் பின்புறம் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அட்டப்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அக்காள் இறந்த 52 ஆவது நாளில் தங்கை சரண்யா அதே இடத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சிறுமிகளின் சாவில் மர்மம் உள்ளதாக கூறினர். இதையடுத்து பிரேத பரிசோதனையில் அக்காள், தங்கை இருவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. விசாரணையில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது அவர்களது உறவினர் மது (வயது 27), பக்கத்து வீட்டை சேர்ந்த ஷிபு (43) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக பாலக்காடு மாவட்ட நீதிமன்றத்தில்
நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 4 ஆவது குற்றவாளியான பிரதீப்குமாரை
நீதிபதி முரளி கிருஷ்ணன் கடந்த 30 ஆம் தேதி விடுவித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் சிறுமிகள் கொலை வழக்கில் கடந்த வெள்ளிக் கிழமை பாலக்காடு
மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் 2 சிறுமிகள் கற்பழித்து கொலை
செய்யப்பட்ட வழக்கில் போலீசார் உரிய ஆதாரகளை சமர்ப்பிக்கவும் குற்றத்தை
நிருபிக்கவும் தவறிவிட்டதால் குற்றவாளிகள் மூவரும் விடுதலை
செய்யப்படுகிறார்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பு கேரளா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை போலீசார் தப்பவைத்து விட்டனர் என கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் சிறுமிகளின் பெற்றோர் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் முறையிட்டும், அரசால் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்பது போல பதிலளிக்கப்பட்டுள்ளது. இறுதியாக அரசு தரப்பு வக்கிலை மாற்றலாம் என்று மட்டும் முடிவு செய்யப்பட்டுள்ளது.