அழகாக இருக்க வேண்டுமா! ஆயுர்வேதம் சொல்லும் மூன்று முக்கிய அம்சங்கள்!
அழகாக இருக்க வேண்டுமா! ஆயுர்வேதம் சொல்லும் மூன்று முக்கிய அம்சங்கள்!
அழகு என்பது அனைவரின் விருப்பம். அகத்தின் அழகே முகத்தில் தெரியும் என்ற போதும்.
புறத்தால் அழகாக இருப்பதை காட்டிலும் ஆரோக்கியமாக இருத்தல் அவசியம். ஆனால்
இன்று பலர், அழகிற்கு முக்கியத்துவம் அளித்து வேதி பொருட்களை பயன்படுத்த
துவங்கிவிட்டனர். மற்றும் பல அறுவை சிகிச்சைகள் கூட செய்ய தொடங்கிவிட்டனர்.
ஆனால் அவையெல்லாம் ஆரோக்கியமானதா என்பது தான் கேள்வி. ஆயுர்வேதத்தில்
ஆரோக்கியத்தையும் அழகையும் கூட்டுவதற்கு இயற்கையாக எளிமையாக பல வழிகள்
உண்டு. அழகு என்பது மூன்று நிலையிலானது ஒன்று புறத்தால் அழகாயிருத்தல், உணர்வால்
அழகாய் இருத்தல், மற்றொன்று அகத்தால் அழகாயிருத்தல்.
புற அழகு
ஆயுர்வேத விதியின் படி, நாம் உட்கொள்ளாத எந்தவொன்றையும் முகத்திற்கும் கேஷத்திற்கும்
உபயோகிக்காதீர்கள். எனவே அழகு சாதன பொருட்களாக நீங்கல் பயன்படுத்துபவை
இயற்கை பொருட்களாக இருக்கும் படி பார்த்து கொள்ளுதல் அவசியம்.
உதாரணமாக,
- வாரம் ஒருமுறை எள்ளு எண்ணெய்யை முகத்தில் பூசி அழுந்த தேயுங்கள். இது
சருமத்திலுள்ள துளைகளை சுத்திகரித்து திறந்து வைக்கும். - அதன் பின் மிதமான் ஆவியில் முகத்தை வையுங்கள். இதன் மூலம் வியர்வை
வெளியேறுகிற போது, சருமத்திலுள்ள நச்சுகளும் வெளியேறும். நீங்கள் விரும்பினால்
இதில் இரண்டு துளசி அல்லது ரோஜா இதழ்களை சேர்க்கலாம். - அதன் பின் ஊட்டசத்து மிகுந்த பழங்களை கொண்டு உதாரணமாக, உழித்த வாழை,
துருவிய ஆப்பிள் அல்லது துருவிய கேரட்டுடன் தேனை சேர்த்து முகத்தில் பேக்காக
தடவலாம். சில நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலசவும்.
உணர்வு ரீதியான அழகு.
உணர்வு ரீதியில் நீங்கள் அமைதியாகவும், நிதானமாகவும் இருத்தல் அவசியம். நீங்கள்
அழுத்தத்தில் அல்லது உணர்வு கொந்தளிப்பில் இருந்தால் அது உங்கள் முகத்தில்
பிரதிபலிக்கும். சாத்வீகமாக இருக்ககூடிய மனம், அழகான முக உணர்வை கொண்டிருக்கும்
என்பது அடிப்படை. சாத்வீக வாழ்வை மேற்கொள்வது மிக எளிதானது, ஆரோக்கியமான
உணவை உட்கொள்ளுங்கள், கேட்பது, பார்ப்பது என அனைத்திலும் நேர்மறை
விஷயங்களையே விரும்புங்கள். நல்லவைகளை செய்து உங்கள் மனதை நேர்மறையாக
வைத்து கொள்ளுங்கள். நேர்மறை எண்ணங்கள் உங்கள் மனதையும், முகத்தையும் மலர்வாக
வைத்திருக்கும்.
அக அழகு